இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.
2002 ஆம் ஆண்டு மோகன் பகான் என்ற பிரபல கிளப் அணியுடன் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கினார் சுனில் சேத்ரி. அதன் பின் 2005ஆம் ஆண்டு சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அறிமுகமாகி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்துச் சாதனை படைத்திருந்தார். கால்பந்தில் அசாத்திய திறமையைக் கொண்ட சுனில் சேத்ரி 2011ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.சுனில் சேத்ரி
மேலும், அவரது கால்பந்து வாழ்க்கையில் ஏஐஎப்எப் (AIFF) வழங்கும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் சுனில் சேத்ரி இருக்கிறார். இந்நிலையில் தற்போது சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். இதுதெடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், " எனது கடைசி போட்டியில் விளையாடப் போகிறேன் என்று முடிவு செய்த பிறகு என் குடும்பத்தினரிடம் அதைப்பற்றி கூறினேன். அப்போது என் அப்பா இதனை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டார். சொல்லபோனால் மகிழ்ச்சி அடைந்தார்.
இனி நாட்டுக்காக எந்த போட்டியிலும் விளையாடப் போவதில்லை என்று என் மனைவியிடம் கூறினேன். என் மனைவி கண்ணீர் சிந்தினார். ஏன் கண்ணீர் வந்தது என்று அவருக்கே தெரியவில்லை. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக நீண்ட ஆலோசனையை எனக்குள் செய்து கொண்டேன். அதன் பிறகுதான் ஓய்வுபெறும் முடிவுக்கு வந்தேன். இந்த முடிவுக்காக சோகமடைவேனா என்றால், நிச்சயம் சோகமடைவேன். ஒவ்வொரு நாளும் இதற்காக வருத்தப்படுவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
இதுவரை 145 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி 93 கோல்களை பதிவு செய்திருக்கிறார். வரும் ஜூன் 6 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்துடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/T6yBs6

0 Comments
Thanks for reading