கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக விராட் கோலி சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். அவர் பேசியவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறி இருக்கிறது. இம்முறை இந்திய அணிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் விராட் கோலி இருக்கிறார். இதனிடையே 35 வயதை எட்டியிருக்கும் விராட் கோலியின் ஓய்வு பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன. விராட் கோலி
இந்நிலையில் ஓய்வு குறித்து பேசிய விராட் கோலி, " ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் முடிவு என்ற ஒன்று இருக்கும். என்னால் இறுதிவரை விளையாடிக்கொண்டே இருக்க முடியாது. எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்கவும் எனக்கு விருப்பமில்லை.
என் கிரிக்கெட் வாழ்வில் இதனைச் செய்திருக்கலாம் என்று பின்னாட்களில் வருத்தப்படக்கூடாது. நான் செய்ய நினைப்பவற்றையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும். அதனால்தான் என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டி முனைப்போடு ஆடுகிறேன்.விராட் கோலி
அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது. ஆனால், நான் ஓய்வை அறிவித்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் என்னைக் காணவே முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/T6ybZH

0 Comments
Thanks for reading