Sai Sudharsan: "சாய் சுதர்சனை நாம் இன்னும் கொண்டாடணும்!" - கிரீம் ஸ்மித் ஆதங்கம்

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி குஜராத்தின் மோடி மைதானத்தில் நேற்று நடந்திருந்தது. வென்றே ஆக வேண்டிய இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் குஜராத் அணி சார்பில் ஓப்பனர்களாகக் களமிறங்கிய கில் மற்றும் சாய் சுதர்சன் என இருவருமே சதமடித்திருந்தனர். சிறப்பாக ஆடியிருந்தனர். சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களை அடித்திருந்தார்.சாய் சுதர்சன்சாய் சுதர்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் சுப்மன் கில்லுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை கொடுத்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான கிரீம் ஸ்மித், சாய் சுதர்சன் குறித்து ரொம்பவே புகழ்ந்து பேசியிருக்கிறார். சாய் சுதர்சனைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.Graeme Smith | கிரீம் ஸ்மித்

"சுப்மன் கில்லுடன் மேத்யூ வேட் ஓப்பனராக இறங்க வேண்டும். சாய் சுதர்சன் நம்பர் 3-இல் இறங்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், குஜராத் அணி எடுத்த முடிவு அபாரம். சாய் சுதர்சனை ஓப்பனிங் இறக்கியது அற்புதமான முடிவு. கில் மற்றும் சுதர்சன் இடையேயான பார்ட்னர்ஷிப் பிரமிப்பாக இருந்தது. இடது கை - வலது கை காம்பினேஷனில் விக்கெட்டுகளுக்கு நன்றாக ஓடி ஓடி ரன்களைச் சேர்த்து அசத்திவிட்டார்கள்.

பீல்டர்களை நன்றாகப் பார்த்து இடைவெளிகளை டார்கெட் செய்து நன்றாக ஆடினார்கள். சாய் சுதர்சன் பெரிய வெளிச்சம் பெறாமல் அதிகம் பேசப்படாமல் இருக்கிறார். நடப்பு சீசனில் குஜராத் அணிக்காக அதிக ரன்களை குவித்திருப்பது அவர்தான். ஐ.பி.எல்-இல் அதிவேகமாக ஆயிரம் ரன்களை குவித்திருக்கும் வீரரும் இவர்தான்.Sai Sudharsanசச்சினை விட ஆறு இன்னிங்ஸ்கள் குறைவாகவே இந்த மைல்கல்லை எட்டிவிட்டார். மேலும், இந்தப் போட்டியில் அதி அற்புதமாக ஒரு சதத்தை அடித்திருக்கிறார். சாய் சுதர்சனைப் பற்றி நாம் இன்னும் அதிகமாகப் பேச வேண்டும்" என்றார்.

சாய் சுதர்சனின் சதத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.


http://dlvr.it/T6kPdM

Post a Comment

0 Comments