இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருக்கிறார்.ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேக முகம் ஆண்டர்சன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆச்சர்யமூட்டும் வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணிக்காக வெற்றிகரமாக ஆடி வந்தார். வயது ஏறிக்கொண்டே சென்றதால் ஆண்டர்சனைச் சுற்றி ஓய்வைப் பற்றிய பேச்சுகள் சுழன்றுகொண்டே இருந்தன. கொரோனாவுக்குப் பிறகு இருந்தே ஆண்டர்சனின் ஒய்வு பற்றிய பேச்சுகள் ஒவ்வொரு தொடரின் போதும் எழுந்துகொண்டே இருந்தது. இந்நிலையில், யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆண்டர்சனே இப்போது தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "எல்லாருக்கும் வணக்கம். வரும் கோடைக்காலத்தில் லார்ட்ஸில் நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியோடு நான் ஓய்வு பெறுகிறேன். தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆடிய இந்த 20 ஆண்டுகளுமே அபாரமானவை. சிறுவயதிலிருந்து நான் விரும்பி நேசித்த ஒரு ஆட்டத்தை ஆடி முடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.இங்கிலாந்து அணிக்காக மைதானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் தருணங்களை இனி தவறவிடுவேன். ஆனால், ஓய்வு பெற இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். என்னைப் போலவே பிறருக்கும் தேசத்திற்கு ஆட வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களுக்காக வழிவிடுகிறேன்!சுப்மன் கில், ஜேம்ஸ் ஆண்டர்சன்
டேனியல்லா, லோலா, ரூபி மற்றும் என்னுடைய பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியாது. அவர்களுக்குப் பெரும் நன்றிகள். இந்த வேலையை உலகின் சிறந்த வேலையாக மாற்றிக்கொள்ள உதவிய பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களுக்கும் நன்றி. வாழ்வில் இனி வரப்போகும் புது சவால்களை எதிர்கொள்ள ஆர்வமாகக் காத்திருக்கிறேன். இனி என்னுடைய நாள்களை கோல்ப் ஆட்டத்தால் நிரப்பிக்கொள்வேன். இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே எனக்கு பெரும்பலம்!" என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.James Anderson
ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. அந்தப் போட்டிதான் ஆண்டர்சனின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கப்போகிறது. 41 வயதாகும் ஆண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் 700 வில்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/T6kxjk

0 Comments
Thanks for reading