Dhoni: "தோனி ஆடுற காலத்துல ஆடுறதே பெருமைதான்!" - ரஷீத் கான் நெகிழ்ச்சி

நேற்றைய போட்டியில் தோனிக்குப் பந்து வீசியது குறித்து ரஷீத் கான் பேசியிருக்கிறார்.

அகமதாபாத் மைதானத்தில் நேற்று குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 11 பந்துகளைச் சந்தித்த தோனி 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார். ரஷீத் கான், தோனி

தோனி விளையாட உள்ளே வந்தபோது குஜராத் அணி வீரர் ரஷீத் கான் அவரிடம் மரியாதை நிமித்தமாக கை கொடுத்துப் பேசி விட்டு பந்து வீச சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோனிக்குப் பந்து வீசியது குறித்து பேசிய ரஷீத் கான், "தோனிக்கு கடந்த காலங்களிலும் பந்துவீசியிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் நுழையும்போதும் அவருக்கு வேறுவிதமான வரவேற்பும் அபாரமான அன்பும் கிடைக்கிறது.

உலகின் எந்த இடத்தில் ஆடினாலும் அவருக்கு இதே அன்பு கிடைப்பதுதான் சிறப்பு. அவர் ஆடும் காலத்தில் நானும் கிரிக்கெட் ஆடுகிறேன். அவருக்கு எதிராகப் பந்துவீசியிருக்கிறேன் என்பதெல்லாம் பெரும் மகிழ்ச்சி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

பிறகு போட்டி குறித்து பேசிய அவர், “கில் மற்றும் சாய் சுதர்சன் விளையாடுவதைப் பார்க்க நாம் விரும்புவோம். தோனி

அவர்கள் விளையாடிய விதம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. இன்று வெற்றி பெற்ற பக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு முதுகில் பிரச்னை இருந்தது. தற்போது அது சரியாகிக்கொண்டே வருகிறது" என்று கூறியிருக்கிறார்.


http://dlvr.it/T6kPW3

Post a Comment

0 Comments