ICC World Cup 2023: 1.20 லட்சம் அடி உயரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பை; வியக்கவைக்கும் வீடியோ!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்களுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இத்தொடரில் களமிறங்குகின்றன. இந்நிலையில் இந்தத் தொடருக்கான கோப்பையை வியக்க வைக்கும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் பூமியிலிருந்து 1,20,000 அடி உயரத்தில் விண்வெளியில் (Stratosphere) வைத்து அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. பின்னர், கோப்பை ஆகாயத்திலிருந்து கீழே இறங்கி வருவதுபோல 1,20,000 அடி உயரத்திலிருந்து பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூன் மூலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தரையிறங்கியுள்ளது. இதன் வியக்க வைக்கும் பிரமாண்டக் காட்சிகள் பலூனில் இணைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தக் கோப்பை இந்தியாவில் இன்று முதல் வரும் ஜூலை 14-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் வலம் வரப்போகிறது. இதைத்தொடர்ந்து பக்ரைன், மலேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினி, அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், குவைத், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, உகாண்டா, நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இறுதியாக, இந்தக் கோப்பை மீண்டும் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியா கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.இன்று, அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறும் இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ICC 2023 World Cup schedule. pic.twitter.com/0ppfXxQgt1— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 27, 2023 இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி அதே அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நிறைவுபெறுகிறது. இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இத்தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8, 14, 18, 23, 27 உள்ளிட்ட தேதிகளில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. முழு விவரங்கள் கீழேயுள்ள இணைப்பில்...ICC World Cup 2023 Fixtures: 10 மைதானங்கள், 48 போட்டிகள்; ஐ.சி.சி உலகக்கோப்பை அட்டவணை முழு விவரம்!
http://dlvr.it/SrJMvx

Post a Comment

0 Comments