ICC World Cup 2023 Fixtures: 10 மைதானங்கள், 48 போட்டிகள்; ஐ.சி.சி உலகக்கோப்பை அட்டவணை முழு விவரம்!

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி இப்போது அறிவித்திருக்கிறது. அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்தும் நியூசிலாந்தும் அஹமதாபாத்தில் மோதும் ஆட்டத்தோடு உலகக்கோப்பை தொடங்கவிருக்கிறது.ICC World Cup 2023 Fixtures இந்தியா கடைசியாக 2011 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து உலகக்கோப்பைத் தொடரை நடத்தியிருந்தது. அந்த உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. மும்பையில் நடைபெற்ற விழாவில் வீரேந்திர சேவாக், முத்தையா முரளிதரன், ஜெய் ஷா மற்றும் ஐ.சி.சி நிர்வாகத் தலைவர் அலார்டிஸ் ஆகியோர் போட்டி அட்டவணையை வெளியிட்டனர்.இந்தியா முழுவதும் மொத்தம் 10 மைதானங்களில் 48 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.இந்திய அணியின் போட்டிகள் தரம்சாலா, டெல்லி, லக்னோ, புனே, அகமதாபாத், மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இவற்றில் எல்லா மைதானங்களிலும் தலா 5 போட்டிகளும் ஹைதராபாத்தில் மட்டும் 3 போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி, தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி ஆடும் போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது. பாகிஸ்தான் அணியுமே கூட அஹமதாபாத் போன்ற மைதானங்களில் ஆட மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், போட்டி அட்டவணையில் பாகிஸ்தானுக்கு அஹமதாபாத்திலும் ஒரு போட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது.சென்னையில் நடைபெறும் போட்டிகள்அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் நடைபெறும் போட்டி அஹமதாபாத்தில் நடக்கிறது. இதுபோக, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், அஹமதாபாத் போன்ற மைதானங்களில் பாகிஸ்தான் அணி ஆடும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.Ahmedabad நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டி மும்பையிலும் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவிருக்கிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.
http://dlvr.it/SrHxRt

Post a Comment

0 Comments