அமெரிக்காவின் பயணக்கட்டுப்பாடு, போட்டி நடைபெறுவதை பாதிக்காது: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குழு

டோக்கியாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பானுக்கு பயனப்படும் நபர்களுக்கு, தனது பயணக்கட்டுப்பாட்டின் வழியாக எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. ஜப்பானுக்கு தற்போது பயணம் செய்ய வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தும் மிக தீவிரமான பயண வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் போட்டி எந்தவித தடையுமின்றி நடக்கும் என ஒலிம்பிக்ஸ் குழு கூறியுள்ளது.

ஒலிம்பிக் நடைபெற இன்னும் இரண்டு மாதத்துக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், அமெரிக்க வெளியுறுவுத்துறை நான்காம் நிலை பயண கட்டுப்பாடு ஆலோசனையை வெளியிட்டிருப்பது, ஒலிம்பிக் நடைபெறுமா என்பதை கேள்வியை வலுப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே ஜப்பான் மக்கள் பலரும் ஒலிம்புக் போட்டி வேண்டாமென கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

image

டோக்கியோவில், கொரோனா தீவிரமாக இருப்பதனால் மே 31 ம் தேதி வரை அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூலை 23 ம் தேதி ஒலிம்பிக் போட்டியை நடத்தியே தீருவோம் என்ற நிலைப்பாட்டிலுள்ளது அந்நாட்டு அரசு.

ஜப்பான் அரசின் இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கு, உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பலவித எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஜப்பான் நாட்டில் கொரோனா இரண்டாவது அலையில், மே 7ம் தேதி முதல் மே 20 ம் தேதிக்குட்பட்ட காலத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வளவு வேகமாக தொற்று பரவுவதால், ஜப்பான் மருத்துவர்கள் அமைப்பு, போட்டியை நடத்தும் முயற்சியை இப்போதே கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இருப்பினும், உச்சகட்ட பாதுகாப்பம்சங்களுடன் இந்த போட்டியை நடத்துவோம் என சொல்லி வருகிறது ஜப்பான் அரசு. பாதுகாப்பு அம்சங்களின் ஒருபகுதியாக, சர்வதேச ரசிகர்கள் போட்டியின்போது கலந்துக்கொள்ள தடை விதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்தும் இதுவரை எந்த முடிவையும் ஜப்பான் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. பார்வையாளர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், போட்டியாளர்களும் போட்டியும் நடக்கும் என்ற முடிவிலேயே அந்நாட்டு அரசு இருக்கின்றது.

ஜப்பான் அரசு அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து டோக்கியோ 2020 ன் தலைமை அதிகாரி சிய்கோ கூறும்போது, 'அமெரிக்காவின் கட்டுப்பாடு எந்தவித்திலும் தங்களின் ஏற்பாடுகளை பாதிக்காது. போட்டியை நடத்த தேவையான முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் நிபுணர் குழு தொடர்ந்து மேற்கொள்ளும்' என கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடுகளை வெளியிட்டிருக்கும் இதேவேளையில், பாதுகாப்பாக போட்டி நடத்தப்படும் என்ற ஜப்பானின் நிலைப்பாட்டை கருத்தில்கொண்டு, பைடன் அரசு தனது நாட்டு விளையாட்டு வீரர்களை உச்சபட்ச பாதுகாப்பு வசதிகளோடு அனுப்பவும் முடிவு செய்திருக்கிறது.

'ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருமே, ஜப்பானுக்குள் நுழையும்போதே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும்' என்று கூறியுள்ளது ஜப்பான் அரசு. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை கிடையாது என்றபோதிலும், அனைவரும் தடுப்பூசி போட்டவர்களாகவே இருப்பர் என ஜப்பான் அரசு உறுதியளித்துள்ளது.

தகவல் உறுதுணை : NDTV

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Tlo1Hn
via IFTTT

Post a Comment

0 Comments