"ராகுல் டிராவிட் என்றால் எனக்கு பயம்!" - பிரித்வி ஷா ஓபன் டாக்

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது அவரைக் கண்டால் பயப்படுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் "19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தார். ராகுல் டிராவிட் வீரர்களிடையே ஒழுக்கத்தை மிகவும் எதிர்பார்ப்பார். அதனால் அவரை கண்டால் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கும். ஆனால் ஆட்டநேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் நட்புடனே இருப்பார். இரவு உணவு நேரத்தின்போது எங்களுடன் அமர்ந்து சாப்பிடுவார். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். இந்தியாவின் கிரிக்கெட் லெஜண்ட் பக்கத்தில் இருப்பதே பெருமிதமாக இருக்கும்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "ராகுல் டிராவிட் உடன் இருப்பது ஒவ்வொரு இளைஞரின் கனவாக அப்போது இருந்தது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் எந்தவொரு வீரரின் பேட்டிங் ஸ்டைலையும் அவர் மாற்றவில்லை. வீரர்களின் இயல்பான அணுகுமுறையை பின்பற்ற சொன்னார். பேட்டிங்கில் திருத்தங்கள் மட்டுமே சொல்வார். ஒரு வீரரின் மனிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தே அதிகம் பேசுவார்" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரித்வி ஷா "போட்டியை என்ஜாய் செய்ய வேண்டும் என்பார். எதிரணியின் வியூகங்களை எப்படி கையாள வேண்டும். அதற்கு ஏற்ப எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அதிகம் சொல்லிக் கொடுப்பார். அதேபோல அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர் மீதும் தனிப்பட்ட அக்கறையுடன் இருப்பார்" என்றார் அவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ulTS7r
via IFTTT

Post a Comment

0 Comments