இளம் மல்யுத்த வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

இளம் மல்யுத்த வீரர் கொலை தொடர்பாக டெல்லி காவல்துறை, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மே 6-ம் தேதி டெல்லி சத்ராசல் மைதானத்தில் ஏற்பட்ட சண்டையில்  23 வயதான இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணா கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சுஷில்குமார் உள்ளிட்ட மூத்த மல்யுத்த வீரர்கள் சிலர் மீது டெல்லி காவல்துறை கொலை, கடத்தல் மற்றும் குற்றச் சதி வழக்குப்பதிவு செய்துள்ளது.

image

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி கூடுதல் டி.ஜி.பி குரிக்பால் சிங் சித்து பாதிக்கப்பட்ட அனைவரின் அறிக்கைகளையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம், அவர்கள் அனைவரும் சுஷில் குமார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சுஷில் குமாரை நாங்கள் தேடி வருகிறோம், அவர் வெளிநாடுகளுக்கு தப்பாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட்  நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சத்ராசல் மைதானத்தில் மூத்த மல்யுத்த வீரர்களுக்கும், இளம் மல்யுத்த வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையில் இளம் வீரர் சாகர் ராணா கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் சில வீரர்கள் கைது செய்யப்பட்டனர், அவ்விடத்தில் சில துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன என போலீசார் தெரிவித்தனர். மூத்த வீரர் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த சாகர் ராணா, வீட்டை காலி செய்ய மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2RJeHfh
via IFTTT

Post a Comment

0 Comments