
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்த செய்தியை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தவான் மற்றும் ரஹானே மாதிரியான இந்திய கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து கோலியும் தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளார்.
உங்களால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என அந்த பதிவில் கோலி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது.
Virat Kohli took his vacine of COVID-19.
— Diwakar Kumar (@diwakarkumar47) May 10, 2021
Stay Safe and healthy King.? pic.twitter.com/fRYRhyNXdt
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2RJApQg
via IFTTT
0 Comments
Thanks for reading