
கால்பந்தாட்ட உலகில் பிரசித்தி பெற்ற தொடர்களில் ஒன்று கோபா அமெரிக்க கால்பந்து தொடர். 1916 முதல் நூற்றாண்டை கடந்து நடத்தப்பட்டு வரும் பாரம்பரியமிக்க தொடர். கடந்த 2020இல் நடத்தப்பட வேண்டிய இந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை இந்த தொடர் அர்ஜென்டினாவில் நடைபெற இருந்தது. அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கிருந்து பிரேசிலுக்கு தற்போது இந்த தொடர் மாற்றப்பட்டுள்ளது.
அதனால், 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை பிரேசில் ஹோஸ்ட்டாக இருந்து நடத்துகிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள தென் அமெரிக்க கால்பந்து கூட்டணிகளை சார்ந்த பத்து அணிகள் விளையாடுவது உறுதி. இருப்பினும் வெளிநாடுகளை சார்ந்த இரண்டு அணிகள் எது என்பது இதுவரை உறுதியாகவில்லை. இறுதி வரை வெளிநாட்டு அணிகளை தொடரில் சேர்க்க முடியவில்லை என்றால் 10 அணிகள் மட்டுமே இந்த முறையில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
¡La CONMEBOL @CopaAmerica 2021 se jugará en Brasil! Las fechas de inicio y finalización del torneo están confirmadas. Las sedes y el fixture serán informados por la CONMEBOL en las próximas horas. ¡El torneo de selecciones más antiguo del mundo hará vibrar a todo el continente!
— CONMEBOL.com (@CONMEBOL) May 31, 2021
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் பிரேசில் இந்த தொடரை நடத்தக்கிறது. வரும் 2022 கால்பந்து உலக கோப்பை தொடருக்கு இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3i4niVd
via IFTTT
0 Comments
Thanks for reading