
விராட் கோலி மிகவும் ஸ்மார்ட்தான் ஆனால் எங்கள் பந்துவீச்சில் அது பலிக்காது என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் தனிமை முகாமில் இருக்கிறார்கள்.

இது குறித்து பேசிய நியூசிலாந்தின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுத்தி "ஆர்சிபி அணிக்காக கைல் ஜேமிசனும் - விராட் கோலியும் ஒன்றாக விளையாடுகிறார்கள். இதனை பயன்படுத்தி பயிற்சியின்போது ஜேமிசனிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்படும் 'டியூக்' பந்து குறித்து விசாரித்துள்ளார். மேலும் ஜேமிசன் டியூக் பந்தை வீசியிருக்கிறாரா என்று கேட்டு தெரிந்து வைத்திருக்கிறார். இதிலிருந்து கோலி எவ்வளவு ஸ்மார்ட் ஆனவர் என புரிந்துக்கொள்ள முடிகிறது" என்றார்.
மேலும் " வலைப்பயிற்சியின்போது டியூக் பந்தை வைத்து பவுலிங் போட சொல்லியிருக்கிறார் கோலி. ஆனால் மிகவும் சாமர்த்தியமாக அதனை மறுத்திருக்கிறார் ஜேமிசன். ஜேமிசன் செய்தது தவறே இல்லை. ஆனால் கோலி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அவரின் விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்துவார். ஜேமிசன் விரிக்கும் வலையில் கோலி நிச்சயம் சிக்குவார்" என்றார் டிம் சவுத்தி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uBnPAG
via IFTTT
0 Comments
Thanks for reading