"இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு இதுவே தருணம்"- திலீப் வெங்சர்கார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா இதுவரை இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதில்லை. அதனால் இம்முறை பலமாக இருக்கும் இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்தை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியிருக்கிறது.

image

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் "கொரோனா பயோ பபுளை முடித்துவிட்டு கிரிக்கெட் விளையாடுவது சாதாரண காரியமல்ல. அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சவாலானதாகவே இருக்கும். ஆனால் இந்தியா நல்ல பார்மில் இருக்கிறது. அவர்கள் நிச்சயம் நன்றாக விளையாடுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

மேலும் "அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தில் நடைபெறுவதால் நியூசிலாந்து அணி பலம் வாய்ந்ததாகவே பார்க்கப்படும். அதனால் இந்தியா இங்கிலாந்தின் சூழ்நிலைக்கு தங்களை விரைவாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நியூசிலாந்துக்கு இறுதிப் போட்டிக்கு முன்பாக இரண்டு டெஸ்ட்களில் பங்கேற்பதால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் கோலி தலைமையிலான அணிக்கு இது சவாலானதாகவே இருக்கும்" என்றார் திலீப் வெங்சர்கார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3g1HmVH
via IFTTT

Post a Comment

0 Comments