"ஒரே ஒரு டெஸ்ட் போட்டி என் வாழ்க்கையை மாற்றியது" - ரவீந்திர ஜடேஜா

இங்கிலாந்து அணிக்கு எதிராக 2018 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி என் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது ஜடேஜா 8 ஆவது வீரராக களமிறங்கி 86 ரன்கள் சேர்ப்பார். அந்த இன்னிங்ஸ் ஜடேஜாவுக்கு புகழ் தந்தது மட்டுமல்லாமல், இந்தியா நெருக்கடியில் இருந்தும் தப்பியது.

image

இது குறித்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழ்க்கு பேசியுள்ள ஜடேஜா "அந்த டெஸ்ட் போட்டி வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது. என்னுடைய திறன், என் தன்னம்பிக்கை என அனைத்தையும் அதிகப்படுத்தியது. இங்கிலாந்து மண்ணில் அவர்கள் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடியது மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இனி உலகின் எந்த மூளையிலும் ரன்களை குவிக்கலாம் என்ற உத்வேகத்தை அந்தப் போட்டி ஏற்படுத்தியது" என்றார்.

மேலும் பேசிய அவர் "பின்பு ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்தார். பின்பு அவரின் இடத்துக்கு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தேன். அதிலிருந்து எல்லாம் நல்லபடியாக சென்றுக்கொண்டு இருக்கிறது. ஆனால் அணியில் இடம் கிடைக்காத ஒன்றரை ஆண்டுகள் மிகக் கொடுமையாக இருந்தது. பல இரவுகள் எனக்கு தூக்கமற்றதாகவே இருந்தது. ஒவ்வொரு விடியலும் என்ன செய்வதென்று அறியாமலயே விடியும்" என்றார் ஜடேஜா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fXPeHp
via IFTTT

Post a Comment

0 Comments