நடப்பு ஐபிஎல் சீசனின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்த ஆட்டதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணிக்காக கேப்டன் கே. எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த சீசனில் இந்த இணை அபாயகரமான தொடக்க கூட்டணியாக விளங்கியது. அந்த வகையில் இந்த சீசனிலும் நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் பஞ்சாப் அணி 22 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க், சக்காரியா வீசிய பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
Chetan Sakariya opens his account with the wicket of Mayank Agarwal.#PBKS 22/1
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
Live - https://t.co/PhX8FyJiZZ #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/AgH2ZiqgmM
பின்னர் களத்திற்கு வந்த கெய்ல், ராகுலுடன் கூட்டு சேர்ந்து விளையாடினார். இருவரும் 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 28 பந்துகளில் 40 ரன்களை குவித்த கெய்ல், ரியான் பராக் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர் பெவிலியன் திரும்பியதால் தீபக் ஹுடா கிரீசுக்கு வந்தார். அவரும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை விளையாடினார்.
15 ஓவர்களில் பஞ்சாப் அணி 161 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் கேப்டன் 8 பவுலர்களை பயன்படுத்தி இருந்தார். இருப்பினும் விக்கெட் வீழ்த்த முடியாமல் அந்த அணி திணறியது. அணியில் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர் மற்றும் மணன் வோஹ்ரா மட்டும் தான் பந்து வீசவில்லை.
FIFTY!@klrahul11 brings up his 22nd IPL half-century with a maximum!
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
Live - https://t.co/PhX8FyJiZZ #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/PCZOol0wYt
தீபக் ஹுடா இருபது பந்துகளில் அரைசதம் கடந்தார். அதில் ஆறு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும். 28 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அவுட்டானார் அவர். தொடர்ந்து நிக்கலஸ் பூரன் களத்திற்கு வந்தார். இருப்பினும் மோரிஸ் வீசிய பந்துவீச்சில் சக்காரியா டைவ் அடித்து பிடித்த அற்புதமான கேட்சினால் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
Take a bow, Deepak Hooda.
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
A FIFTY off just 20 deliveries ??
Live - https://t.co/WNSqxT6ygL #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/PgeEzncFz6
அதனால் தமிழக வீரர் ஷாருக் கான் பேட் செய்ய வந்தார். மறுபக்கம் ராகுல் கடைசி ஓவரில் 50 பந்துகளில் 91 ரன்களை குவித்து அவுட்டானார்.
இருபது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அந்த இமாலய இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டி களம் காண்கிறது. பட்லர், ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், பராக், தெவாத்தியா மாதிரியான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dTF1eh
via IFTTT
0 Comments
Thanks for reading