கொரோனா தொற்று ஏற்பட்டது பின்னடைவுதான் என ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியன் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தன்னை வீட்டில் தனிமைபடுத்திக் கொண்ட அவருக்கு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மூன்று பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானதை அடுத்து அவர் நடப்பு சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாட பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
“கொரோனா தொற்று ஏற்பட்டது பின்னடைவுதான். அது மட்டும் நடந்திருக்கவே கூடாது. இருந்தாலும் தொற்று ஏற்படுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கு தொற்று உறுதியானதும் அதிலிருந்து விரைவில் விடுபட எண்ணினேன். தொற்று பாதிப்பு இல்லை என தெரிந்ததும் ஃபிட்னெஸ் விஷயத்தில் கவனம் செலுத்தினேன். அதன் மூலம் ஆட்டத்திற்கு என்னை தயார் செய்து கொண்டேன். நான் இப்போது பூரண குணம் அடைந்துள்ளேன்.
Bold Diaries: Devdutt Padikkal Interview
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 12, 2021
After a roller coaster ride in the last six months, a fit and rejuvenated Devdutt Padikkal is raring to gung-ho again. Watch his interview on @myntra presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/7CFkJFb4Sw
கடந்த ஐபிஎல் சீசன் மற்றும் அண்மையில் விளையாடிய உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ரன்களை குவித்துள்ளது என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது” என படிக்கல் ஆர்சிபி அணிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dREdGK
via IFTTT
0 Comments
Thanks for reading