டெல்லி மாநிலத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.1.5 கோடி நிதியுதவி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுள் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டெல்லி மாநிலத்துக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தப்பட்சம் 2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகளும் நேசக்கரம் நீட்டியிருக்கிறது. இந்த மோசமான சூழலிலும் பயோ பபுள் பாதுகாப்பை பின்பற்றி ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு பாட் கம்மின்ஸ், பிரட் லீ மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நன்கொடை கொடுத்துள்ளனர். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரூ.5.7 கோடி நிதியுதவி அளித்தது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இப்போது நிதியுதவி கொடுத்துள்ளது. இது குறித்த தகவலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அதில் இந்த இக்கட்டான சூழலை சமாளிப்பதற்காக இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள டெல்லிக்கு ரூ.1.5 கோடி நிதியளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிதி ஆக்சிஜன் வாங்குவதற்கும் கொரோனா தொடர்பான மருத்துவ உதவியை மேற்கொள்ளவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QAe2gj
via IFTTT

Post a Comment

0 Comments