"இந்தியாவுக்காக ஆப்கானிஸ்தான் துணை நிற்கும்" - ரஷீத் கான்

இந்தியாவில் இருக்கும் கடுமையான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள் என்று சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தச் சூழலிலும் ஐபிஎல் தொடர் பயோ பபுள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் விளையாடி வருகிறார். ஏற்கெனவே ஆஸ்திரேலிய வீரரான பாட் கம்மின்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார். மேலும் முன்னாள் வீரரான பிரட் லீயும் நன்கொடை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ரஷீத் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #WeAreWithYouIndia என்ற ஹாஷ்டேக்குடன் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் அதில் "ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைவரும் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நிற்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள். தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். மாஸ்க் அணியுங்கள் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3t7qEZc
via IFTTT

Post a Comment

0 Comments