சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தனது கடைசி லீக் போட்டியில் இன்று ஆடவிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் இன்னமும் சென்னை அணி உறுதி செய்யவே இல்லை.
ராஜஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியை சென்னை அணி வென்றே ஆக வேண்டும். ஆனால், இதையெல்லவாம்விட சென்னை அணியின் ரசிகர்கள் மனதில் வேறொரு விஷயம்தான் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.Dhoniசேப்பாக்கத்தில் தோனியின் கடைசிப் போட்டியாக இன்றைய போட்டி இருக்குமா என்பதே அந்த கேள்வி. அப்படி இருப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது என்பதே உண்மை. சேப்பாக்கத்தில் இன்று என்ன நடக்கப்போகிறது?Dhoni
சென்னை அணி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்று இரண்டாவது தகுதிச்சுற்று வரை முன்னேறினால் சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் ஆடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறாமலோ அல்லது தகுதிப்பெற்று எலிமினேட்டரில் வெளியேறினாலோ சென்னை அணிக்கு இன்று ஆடுவதுதான் சேப்பாக்கத்தில் அவர்களின் கடைசிப் போட்டி. இந்த இரண்டிற்குமே வாய்ப்பிருக்கிறது. ஆனால், என்ன நடந்தாலும் இன்று தோனியின் ஓய்வு குறித்து சமிக்ஞைகள் எதாவது தெரிய அதிக வாய்ப்பிருக்கிறது.
எல்லா அணிகளுமே தங்களின் சொத்த மைதானத்தில் கடைசி லீக் போட்டியில் ஆடி முடித்த பிறகு பதாகைகளோடு மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். பரிசுப்பொருள்களை வழங்குகின்றனர். சென்னை அணியும் கடந்த சீசனில் அதை செய்திருந்தது. இத்தனைக்கு ப்ளே ஆப்ஸூக்கு மீண்டும் சேப்பாக்கத்திற்கு வருவோம் என்று தெரிந்தும்கூட அதை செய்திருந்தார்கள். ஆக, இன்றும் சேப்பாக்கத்தில் போட்டி முடிந்த பிறகு வீரர்களுடன் தோனி அணிவகுத்து மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒரு நிகழ்வு நடப்பதை சென்னை அணியின் நிர்வாகமே இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும்.Dhoni
இந்த சமயத்தில் தோனி ரசிகர்களிடையே பேசுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்போது ஓய்வு பற்றி எதாவது சூசகமாகச் சொல்லக்கூடும். தெள்ளத்தெளிவாக ஓய்வு பெறுகிறேன் என்று தோனி அறிவிப்பாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், சென்னைக்கு இன்னமும் இந்தத் தொடரின் கடைசி வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்க தோனி தெளிவாக ஓய்வை அறிவிப்பது நெகட்டிவ்வாக இருக்கக்கூடும். கடைசி வரை சென்று கடைசியில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருக்கும்.
இன்று டாஸின் போதோ அல்லது போட்டி முடிந்த பிறகான பரிசளிப்பு நிகழ்வின் போதோ ருத்துராஜ் கெய்க்வாட்டிடமே தோனியின் ஓய்வைப் பற்றி கட்டாயம் கேட்பார்கள். அப்போது, மேலும் சில தகவல்கள் கிடைக்கக்கூடும். Dhoni
'என்னுடைய கடைசி டி20 போட்டியை சென்னையில்தான் ஆடுவேன்.' என தோனி ரொம்பவே உருக்கமாகக் கூறியிருக்கிறார். இந்த சீசனில் அதற்கான வாய்ப்புகளெல்லாம் கூடி வந்திருக்கிறது. இப்படி எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு ஆராவாரம் இல்லாமல் ஓய்வை அறிவிக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
http://dlvr.it/T6m1bF

0 Comments
Thanks for reading