சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியா குறித்து நெகிழ்ச்சியாகக் பேசியிருக்கிறார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலமானவர் டேவிட் வார்னர். 37 வயதாகும் டேவிட் வார்னர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். டேவிட் வார்னர்
இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் 8,786 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 26 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடக்கம். டேவிட் வார்னருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய டேவிட் வார்னர், “ இந்தியாவிற்கு வந்தால் என்னை அறியாமல் பெரிய புன்னைகை என் முகத்தில் வந்துவிடும். ஆஸ்திரேலியாவில் வெற்றிபெற்ற மனிதர்களையும் விமர்சிக்கும் வழக்கம் உள்ளது. டேவிட் வார்னர்
அதனாலதான் என்னவோ மைதானத்திற்குள் வந்தால் நான் மலிங்காவிடம் அவுட்டான காணொளியை ஒளிப்பரப்புவார்கள். ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான, பாசிட்டிவ் மனநிலை கொண்ட மக்களாக இருக்கிறார்கள்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
http://dlvr.it/T6bRDS
0 Comments
Thanks for reading