உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து நடராஜன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 2-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கவுள்ள உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. Indian Team for T20 World Cup
அந்த வகையில் ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா,அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். இதில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரரான நடராஜன், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது பெரும் விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் உலகக்கோப்பையில் இடம்பெறாதது குறித்து நடராஜன் பேசியிருக்கிறார்.
"நான் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதும் பெறாததும் என் கையில் இல்லை. அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு பரீசிலிக்கப்படும் வீரர்களின் பட்டியலில் என் பெயர் இருந்ததே பெரிய விஷயம்தான். இன்னும் சிறப்பாக விளையாடி ஹைதராபாத் அணிக்கு வெற்றியைத் தேடித் தருவதுதான் என் குறிக்கோள். உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது என்னை பாதிக்கவில்லை. என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நமக்கு நடக்கும் என நான் எப்போதும் நம்புவேன்” என்று கூறியிருக்கிறார். நடராஜன், பேட் கம்மின்ஸ்
இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குறித்துப் பேசிய அவர், “பேட் கம்மின்ஸ் எனக்கு நிறைய சுதந்திரம் அளிக்கிறார். அவர் மிகவும் வலிமையானவர். எதற்கும் கவலைப்படாதே. என்ன நடந்தாலும் உன்னுடன் நான் இருக்கிறேன்” என என்னிடம் கூறினார். அவருடன் நான் மிகவும் நெருக்கமாகிவிட்டேன்” என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.
http://dlvr.it/T6X0wC
0 Comments
Thanks for reading