BCCI: ஸ்டீபன் பிளெம்மிங் அல்லது ரிக்கி பாண்டிங் - இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் பிசிசிஐ இறங்கியிருக்கிறது.

இந்திய ஆண்கள் சீனியர் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். டிராவிட் 2021-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பை முடிந்த சமயத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்தோடு முடிந்தது. ஜூன் மாதமே டி20 உலகக்கோப்பை இருந்ததால் டிராவிட்டின் பதவிக்காலம் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.Rohit - Dravid

அதன்படி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பையுடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிகிறது. ஜூலை 1-ம் தேதி புதிய பயிற்சியாளர் பதவியேற்க வேண்டும். இந்நிலையில் புதிய பயிற்சியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதன்படி, மே 27-ம் தேதி மாலை 6 மணி வரைக்கும் இப்பணிக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது. BCCI : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக என்னென்ன தகுதிகள் வேண்டும்?

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக்க பிசிசிஐ முனைப்புக் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.BCCI

இவர்களில் யாரேனும் ஒருவர் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக மாறினால், அவர்கள் தங்களின் ஐபிஎல் அணியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் மற்றும் பிளெம்மிங் இருவருமே முனைப்புக் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எம்.எஸ்.தோனியின் பெயரைப் பரிந்துரைத்து அவர் இந்திய அணியை வழிநடத்திச் செல்லவேண்டும் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யார் பதவியேற்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.


http://dlvr.it/T6vwmZ

Post a Comment

0 Comments