ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் தளமான `ட்ரீம் 11' இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்ஸர் உரிமையை ரூ.358 கோடிக்கு பிசிசிஐயிடம் வாங்கியது. தற்போது நடைபெற்று வரும் இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையான டெஸ்ட் தொடரில் ட்ரீம் 11 ஜெர்ஸியினை அணிந்தே வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
Dream 11 - நேரலையில் ஒரு விளையாட்டு நடந்துகொண்டிருக்க அதிலிருக்கும் வீரர்கள் எப்படிச் செயல்புரிவார்கள் என்பதை முன்பே கணித்து, கற்பனையாக நாமும் ஒரு அணியை உருவாக்கி ஆடும் ஃபேன்டஸி விளையாட்டு!ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் ஷெத்
கேமிங் சந்தையைப் புரட்டியிருக்கும் இந்த Dream 11, ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பயனர்களின் இன்றைய எண்ணிக்கை 20 கோடி. தளத்தின் மதிப்பு ரூ.65,000 கோடிக்கு மேலாகும்.
வெற்றிகரமாக இயங்கிவரும் இந்தத் தளத்தினை 2008-ம் ஆண்டு ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் ஷெத் ஆகியோர் தொடங்கினர். 150 முறை தோல்வியான ஐடியா என்று ஒதுக்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் தளம் இப்போது இந்திய அணிக்கே ஸ்பான்ஸராக மாறியுள்ளது.ஆரம்பக் காலகட்டத்தில் இது சூதாட்டம் என்ற புகார் இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடுவதே சூதாட்டம். இதில் தனிநபரின் திறனும் ஆராய்ச்சியும் இருப்பதால் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்பின் அசுர வளர்ச்சி அடைந்த நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாமலேயே 1 பில்லியன் டாலர் மதிப்பை எட்டி, இந்தியாவின் முதல் `யுனிகார்ன்' அந்தஸ்தைப் பெற்ற கேமிங் நிறுவனம் எனும் பெயரை வாங்கியது.Dream 11, BCCI
வெற்றிகரமான இந்தப் பயணத்தின் ஐடியா, EPL எனச் சொல்லக்கூடிய ஆங்கில கால்பந்து ஆட்டத்தின் ஃபேன்டஸி கேமிங்கின் ஐடியாவில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஹர்ஷ் ஜெயின் EPL ஃபேன்டஸி கேமிங்கினால் ஈர்க்கப்படுகிறார். "தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்..." - பிரதமருக்கு கோரிக்கை வைக்கும் இந்திய கால்பந்து பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெறித்தனமான ரசிகரான இவர் இந்தியாவில் இதைக் கொண்டு வர முயற்சி செய்தார். தனது நண்பர் பவித் ஷெத்துடன் இணைந்து EPL மாடலைச் செயல்படுத்தினார்.ஆரம்பத்தில் பல லட்சம் மனிதர்கள் பங்கு பெரும் போட்டியில் சிலருக்கே பரிசு என்ற நிலையே இருந்தது. இது அதிகம் லாபம் தராததால் ‘ரெட் டிஜிட்டல்’ நிறுவனத்தோடு இணைந்து ஒரு சில மாற்றங்களோடு மீண்டும் முயற்சியைத் தொடந்தனர்.
புதிய ஜெர்ஸியில் இந்திய அணி
இப்போது மாதத்திற்கு 100 மில்லியன் டாலர் லாபம் என்று பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது ட்ரீம் 11. கர்நாடக மாநிலத்தில் சூதாட்டம் என்று இது தடை செய்யப்பட்டது. மேலும், மனிதர்களோடு அதிக கணினி பாட்கள் போட்டியில் செயல்படுகின்றன என்ற புகார்களும் இதன் மேல் இருக்கின்றன.இருந்தும் ஐ.பி.எல் ஸ்பான்சர், தோனி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ஆமிர்கான் உட்பட பிரபலங்களின் விளம்பரங்கள் என வெற்றிகரமாக வலம் வருகிறது ட்ரீம்11. இப்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்ஸராகவும் மாறியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்காகப் போடப்பட்டுள்ளது.
http://dlvr.it/SsMHmf

0 Comments
Thanks for reading