"தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்..." - பிரதமருக்கு கோரிக்கை வைக்கும் இந்திய கால்பந்து பயிற்சியாளர்

ஆசியப்போட்டிகள் சீனாவில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறவிருக்கிறது. ஆசியக்கோப்பையின் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் தங்களின் பங்கேற்பை ஜூலை 27க்குள் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய கால்பந்து அணி பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆசியப்போட்டிகளுக்கென சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அதன்படி, 'அணிகளுக்கான போட்டிகளில் ஆசிய அளவிலான தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் அணிகள் மட்டும்தான் இந்தியா சார்பில் பங்கேற்க முடியும்.'Igor Stimac ஆனால், இந்திய கால்பந்து அணி ஆசிய அளவிலான தரவரிசையில் 18 ஆவது இடத்தில் உள்ளது. இதனால்தான் ஆசியப்போட்டிகளில் இந்திய கால்பந்து அணியின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது. கடைசியாக 2018-ம் ஆண்டு நடந்த ஆசியப்போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்கவில்லை. அப்போது ஆசிய அளவிலான தரவரிசையில் இந்திய அணி 14வது இடத்தில் இருந்தது. இந்நிலையில்தான், இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்து ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், "இந்திய அணி ஆசியப்போட்டியில் பங்கேற்பதில் நிலவி வரும் சிக்கல்களைப் பற்றித் தங்களுக்கு யாரும் தகவல் சொன்னார்களா அல்லது தங்களுக்கு அதைப் பற்றி தெரியுமா என எனக்குத் தெரியவில்லை. 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை 2017-ல் இந்தியா நடத்தியிருந்தது. அதன்மூலம், ஓர் இளம் பட்டாளத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கினோம். 2017-ல் ஆடிய 17 வயதுக்குட்பட்ட அணியினர் அதன்பிறகு 23 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றிலும் நன்றாக ஆடியிருக்கிறார்கள். அதே அணிதான் இப்போது ஆசியக்கோப்பைக்கும் செல்லவிருக்கிறது.இந்திய கால்பந்து அணிஒரு அணியாக கடந்த நான்காண்டுகளில் கடினமாக உழைத்து சிறப்பான முடிவுகளைப் பெற்றிருக்கிறோம். இந்திய அணி ஆசியக்கோப்பையில் பங்கேற்க வேண்டாம் என்பதற்குச் சொல்லப்படும் காரணம் அநீதியானது. A humble appeal and sincere request to Honourable Prime Minister Sri @narendramodi ji and Hon. Sports Minister @ianuragthakur, to kindly allow our football team to participate in the Asian games We will fight for our nation’s pride and the flag! Jai Hind!#IndianFootball pic.twitter.com/wxGMY4o5TN— Igor Štimac (@stimac_igor) July 17, 2023 தரவரிசையின்படி பார்த்தாலுமே நாம் பல அணிகளை விடவும் சிறப்பாக ஆடக்கூடிய அணியாகவே இருக்கிறோம். தரவரிசையில் கீழ் இருக்கும் ஓர் அணியால் உச்சத்திலிருக்கும் அணியை கூட வெல்ல முடியும் என்பதே இந்தக் கால்பந்து விளையாட்டின் சிறப்பம்சம். இந்திய அணி ஆசியக்கோப்பையில் பங்கேற்க வேண்டுமென்பது நூறு கோடி மக்களின் நம்பிக்கை மற்றும் பிரார்த்தனை. அதனால் நீங்கள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழக்கம்போல கால்பந்துக்கு உங்களின் ஆதரவையும் வழங்க வேண்டும்" எனப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். ஆசியக்கோப்பையில் 1951 மற்றும் 1960 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி தங்கம் வென்றிருக்கிறது. 1970-ல் வெண்கலம் வென்றிருந்தது. கடைசியாக 2014-ம் ஆண்டு நடந்த தொடரில் 26வது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், சமீபமாக இந்திய அணி சிறப்பாகவே ஆடிக்கொண்டிருக்கிறது. தெற்காசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வெகு சமீபத்தில்தான் இந்தியா வென்றிருந்தது. அது சீனியர் அணிதான் என்றாலுமே ஒட்டுமொத்தமாக கால்பந்தில் இந்திய அணி வளர்ச்சியை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. இப்படியொரு சமயத்தில் ஆசியக்கோப்பை மாதிரியான பெரிய தொடரில் இந்திய அணி பங்கேற்பது அதன் வளர்ச்சியின் வேகத்தை இன்னுமே முடுக்கிவிடும். மேலும், தரவரிசையின் அடிப்படையில் அணிகளின் செயல்பாட்டை நிர்ணயிக்கவே முடியாது.கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி, ஆடிய முதல் போட்டியிலேயே சவுதி அரேபியாவிடம் தோற்று அதிர்ச்சி கொடுத்திருந்தது.Igor Stimac கடைசியில் அர்ஜெண்டினாதான் சாம்பியன் ஆகியிருந்தது. ஆனால், இங்கே கவனிக்க வேண்டியது அந்த முதல் போட்டியைத்தான். தரவரிசையின் அடிப்படையில் பார்த்தால் சவுதி அரேபியாவையும் அர்ஜெண்டினாவையும் சம போட்டியாளர்களாக ஒப்பிடவே முடியாது. அதேமாதிரிதான் காலிறுதியில் போர்ச்சுக்கலை மொரோக்கோ வீழ்த்தியதும். ஆக, ஒரு பெரிய தொடரில் தரவரிசையை வைத்து ஒரு அணியின் செயல்பாட்டைத் தீர்மானிக்க முனைவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமே.அனுராக் தாக்கூர்"தேசிய விளையாட்டு ஆணையத்தின் முக்கியஸ்தர்கள் கூடி பேசி இந்த விதியிலிருந்து விலக்கு வழங்க முடிவு செய்யலாம்" என ஒரு விதியும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வைத்திருக்கிறது. பயிற்சியாளர் ஸ்டிமாக்கின் கோரிக்கையை ஏற்று விளையாட்டுத்துறை அமைச்சகம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
http://dlvr.it/SsLrhP

Post a Comment

0 Comments