2023-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஜீனியர் ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சமீபத்தில் கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் செல்வ பிரபு படைத்திருந்தார். செல்வபிரபு
இந்நிலையில் ஆசிய தடகள கூட்டமைப்பு சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகளப் பிரிவில் தங்கம் வென்று ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள வீரராகத் தேர்வு செய்யப்பட்ட செல்வபிரபுக்கு வரும் 10ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறும் விழாவில் ஆசிய தடகள சங்கம் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
சிறந்த ஜீனியர் தடகள வீரராகத் தேர்வானதைத் தொடர்ந்து செல்வ பிரபுவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “ மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள் என்று தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.
மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள்! https://t.co/2J7iSQ8ZDv— M.K.Stalin (@mkstalin) July 5, 2023
அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். #AsianAthleticsAssociation-ன் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும்” என்று பாராட்டி இருக்கிறார்.
http://dlvr.it/SrlYhn
0 Comments
Thanks for reading