ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான அட்டவணையும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. உலகக்கோப்பை என்பது ஓர் உச்சபட்சத் தொடர், அதற்கான கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டு அட்டவணை அறிவிக்கப்படுகிறதெனில் ஒட்டுமொத்தமாக அந்த முழுத் தொடருக்கும்தான் எதிர்பார்ப்பு கூடியிருக்க வேண்டும். ஆனால், இங்கே அப்படியில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதப் போகும் அந்த ஒரே ஒரு லீக் போட்டிக்குதான் எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவாகி நிற்கிறது.India vs Pakistan
ஒரு குறிப்பிட்ட போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டி எனும்போது அது ஒருவித வெறுப்புமிகு அரசியலாக மாறுவதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை இந்தியா இங்கிலாந்தில் ஆடிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி வெளியிடும் என்கிற செய்திதான் முதலில் வெளிவந்தது. ஆனால், அந்தச் செய்தி உண்மையாகவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போது உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியாகவில்லை. காரணம், பாகிஸ்தான். பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவிற்கு வந்து ஆடுவதில் ஒருவித மனத்தடை இருந்துக்கொண்டேதான் இருந்தது. அதிலும், குறிப்பாக பிசிசிஐ அஹமதாபாத்தில் வைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நடத்தத் திட்டமிருந்தது.Ahmedabadபாகிஸ்தானுக்கு அஹமதாபாத்திற்கு வந்து ஆட துளிகூட விருப்பமில்லை. காரணம், அங்கிருக்கும் அரசியல் சூழல். இந்தியாவின் தென் பகுதியில் போட்டியை நடத்துமாறு பாகிஸ்தான் தரப்பிலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.
ஆனாலும், அறிவிக்கப்பட்டிருக்கும் போட்டி அட்டவணையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அஹமதாபாத்தில் நடப்பதாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகக்கோப்பைக்கு முன்பாக ஆசியக்கோப்பைத் தொடர் நடக்கவிருக்கிறது. அந்தத் தொடர் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் வைத்து நடைபெறுகிறது. ஆகஸ்ட 31 தொடங்கி செப்டம்பர் 17 வரை இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இப்போது வரைக்கும் இந்திய அணி ஆசியக்கோப்பையில் ஆடப் போவதை உறுதி செய்யவே இல்லை. பாகிஸ்தானில் போட்டி நடைபெறுகிறது என்பதே இந்தியாவின் தயக்கத்துக்கு ஒரே காரணம்.Jay Shah"நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடமாட்டோம். எங்களுடைய போட்டிகளை பொதுவான ஒரு இடத்தில் நடத்த வேண்டும்" என பிசிசிஐ அடம்பிடித்து வருகிறது. பிசிசிஐ யின் விருப்பம் நிறைவேறவே அதிக வாய்ப்பிருக்கிறது.
காரணம் எல்லாருக்குமே தெரியும். ஐ.சி.சி எப்போதுமே ஆதிக்கமிக்க போர்டுகளுக்கே வளைந்து கொடுக்கும்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமரான ஷெபாஸ் ஷெரிஃப் 11 அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து ஆடுவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதுதான் இந்தக் குழுவின் வேலை. இந்தக் குழுவில் இடம்பிடித்திருக்கும் பாகிஸ்தானின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏசான் பேசியதிலிருந்து...என்று தெரிவித்திருக்கிறர் ஏசான்"விளையாட்டுத்துறை அமைச்சரான எனக்கு கீழ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுகிறது. பாகிஸ்தான் அணி அஹமதாபாத்துக்குச் சென்று ஆடுவதைக் கூட ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இந்திய அணி மட்டும் ஆசியக்கோப்பைக்கு பாகிஸ்தான் வராமல் பொது இடத்தில் ஆடுவோம் எனச் சொல்வதை ஏற்கவே முடியாது. எனில், நாங்களும் உலகக்கோப்பையில் எங்கள் ஆட்டங்களை இந்தியாவில் அல்லாமல் பொது இடத்தில் நடத்தச் சொல்லி கேட்போம்!"பாகிஸ்தான்
மொத்தத்தில் இரண்டு பக்கமும் தங்களின் அரசியல் சௌகர்யத்திற்காக விடாப்பிடியாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் பாகிஸ்தான் இந்தியாவில் வந்து, அதுவும் குறிப்பாக அகமதாபாத்தில்தான் விளையாடவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கும் ஜெய் ஷா, ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்புவது குறித்து ஓர் ஆலோசனைக் கூட்டத்தை கூட நடத்தியதாகத் தெரியவில்லை. பேருக்கு கூட அது குறித்து எந்த அறிக்கையும் விடவில்லை.இதற்கிடையில் மூத்த வீரர்கள் சிலருமே கூட யதார்த்த பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன் போலத் தேவையற்ற எதிர்பார்ப்பை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.சமீபத்தில் ஓர் ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் கங்குலி பேசியவை."இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அதில், இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதியில் மோதி அந்தப் போட்டி எங்களின் ஈடன்கார்டனில் நடக்க வேண்டும்!"Sourav Ganguly and Jay Shah
இந்தியா பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கும் வரவே மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில் கங்குலி மாதிரியான ஒரு ஜாம்பவான் வீரரிடமிருந்து இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை எதிர்பார்க்கவே இல்லை. வீரர் என்பதைக் கடந்து அவர் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் வேறு. பிசிசிஐ நிர்வாக நரம்புகளையும் அரசியல் நரம்புகளையும் அக்கு வேறாக அறிந்து வைத்திருப்பவர். அப்படி ஒருவர் யதார்த்தத்தில் நிலவும் உண்மையான பிரச்னைகளுக்கு முகம் கொடுத்திருக்க வேண்டும். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பாருங்கள். அதில் உங்களின் அரசியலையும் வெறுப்பையும் கலக்காதீர்கள். எந்தப் பாரபட்சமுமின்றி இருநாடுகளும் கிரிக்கெட்டில் இணக்கம் கொண்டிருக்க வேண்டும். இப்படிக் கூறிவிட்டு இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டி ஈடன் கார்டனில் நடந்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லியிருந்தால் கங்குலியின் கருத்தை எந்த மனத்தடையுமின்றி ஏற்றிருக்கலாம்.
இது கங்குலி சார்ந்த விஷயமல்ல. கங்குலி போன்றே உண்மைக்கு முகம் கொடுக்க மறுக்கும் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் அத்தனை பேருக்கும் ஆனதுதான். பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றவுடன் ஷமி மீது மதரீதியாக தாக்குதல் நடந்தபோது பேசிய அத்தனை வீரர்களும் பூசி மொழுகி அரைகுறையாக மேலோட்டமாகத்தான் பேசியிருந்தார்கள். விராட் கோலி மட்டும்தான் உண்மையான பிரச்னையை சுட்டிக்காட்டி,Virat Kohli"மதரீதியாக ஒருவரை விமர்சிப்பது அருவறுக்கத்தக்க செயல். நாங்கள் சகோதரர்கள். எங்களின் சகோதரத்துவத்தை யாராலும் குலைக்க முடியாது" எனப் பேசியிருந்தார்.
அதே விராட் கோலி இப்போது நிலவும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்னையைப் பற்றிப் பேசுவாரா என்றால் அது சந்தேகம்தான். ஆயினும், ஷமி பிரச்னையில் விராட் கோலி எடுத்த நிலைப்பாடு யதார்த்தத்தை உணர்ந்ததன் வெளிப்பாடு. இப்படியான துணிச்சலும் உண்மைக்கு முகம் கொடுக்கும் தன்மையும்தான் இப்போது தேவை. அதைவிடுத்து விட்டு வெறுப்பரசியலுக்கு மேலும் தூபம் போடும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்பார்ப்பை மட்டும் கூட்டிக் கொண்டே செல்வதில் எந்த நியாயமும் இல்லை. 'Mauka Mauka' கிண்டல், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வெறும் டிக்கெட் வியாபாரமாக, அரசியல் பிரச்னைக்காகப் பழிதீர்த்துக் கொள்ளும் களமாகப் பார்ப்பது போன்றவை அந்த விளையாட்டின் மாண்புக்குப் பங்கம் விளைவிக்கும் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.World Cup 2023மற்ற போட்டிகளைப் போலவே இதுவும் ஒரு சாதாரண போட்டிதான் என்பதை உணர்வதில்தான் அத்தனையும் அடங்கியிருக்கிறது.
http://dlvr.it/Ss137t
0 Comments
Thanks for reading