"ரோஹித் சர்மாவிடமிருந்து நான் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால்.." -சுனில் கவாஸ்கர் வருத்தம்!

1970, 80 களில் பிரபல கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் சுனில் கவாஸ்கர். இவரைப் பார்த்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர்கள்தான் சச்சின், சேவாக் போன்ற பலர். அறிமுகமான முதல் தொடரிலேயே 4 போட்டிகளில் ஒரு இரட்டை சதம், 3 சதங்கள், 2 அரைசதங்கள் என்று 774 ரன்களை விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். அதுமட்டுமின்றி 1980களிலேயே 10 ஆயிரம் ரன்களை விளாசி சாதனை படைத்தவர். அன்றைய காலத்திலிருந்த மிகப்பெரிய பந்து வீச்சாளர்களையும் ஹெல்மெட்டே போடாமால் அசால்ட்டாகக் கையாண்டு ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர். இப்போது கிரிக்கெட்டில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். சுனில் கவாஸ்கர் சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிவிட்டது மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் தோற்றது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இந்நிலையில், இந்திய கிரிட்கெட் அணியின் குறைகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்து வரும் சுனில் கவாஸ்கர், இந்திய அணி குறித்தும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர், "நான் ரோஹித் சர்மாவிடம் நிறைய எதிர்பார்த்தேன். இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பரவாயில்லை. ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் ரோஹித் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறார். டி20 வடிவிலான ஐபிஎல் தொடரில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் ரோஹித். அதுமட்டுமின்றி, 'ஐபிஎல்'லில் சிறப்பாக விளையாடிவிட்டு வெளிநாட்டுத் தொடர்களில் இறுதிப் போட்டி வரைக்கூட செல்லாமல் தோற்பது மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
http://dlvr.it/Ss0bXG

Post a Comment

0 Comments