கால்பந்து உலகில் உலகளாவிய சூப்பர் பவர்களில் ஒன்றாக லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கருதப்படுகிறது.
மூன்று உலகக் கோப்பை வெற்றிகள், 15 கோபா அமெரிக்கா, 2004, 2006 எனத் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்று அதற்கென தனி ஆதிக்கம் கால்பந்து போட்டிகளில் உண்டு. இந்நிலையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, தெற்கு ஆசியாவில் இரு அணிகளுடன் நட்புறவாகச் சர்வதேச போட்டிகளில் விளையாட முடிவு செய்து அவற்றில் ஒரு ஆட்டத்தை இந்தியாவுடன் ஆட விரும்பி இருக்கிறது.லயோனல் மெஸ்சி
இதற்காக அர்ஜெண்டினா கால்பந்து அமைப்பு அனைத்து இந்தியக் கால்பந்து அமைப்பை அணுகியுள்ளது. ஆனால் இந்தியக் கால்பந்து அமைப்பு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்திருக்கிறது. இதுகுறித்து அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷஜி பிரபாகரன் விளக்கம் அளித்திருக்கிறார்.
"அர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகை தேவை. அர்ஜெண்டினா அணிக்கான போட்டிக் கட்டணமும் ஏறக்குறைய 40 கோடி இருக்கும். அந்த அளவிற்கு அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிடம் நிதி ஆதாரம் இல்லாததால் அவர்களுடன் விளையாடும் வாய்ப்பைத் தவிர்க்க வேண்டியதாயிற்று” என்று தெரிவித்திருக்கிறார்.இந்திய கால்பந்து அணிஇந்தியக் கால்பந்து அணியுடன் அர்ஜெண்டினா அணி விளையாட முடியாததால் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவுடன் மோதி இரண்டிலும் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.
http://dlvr.it/Sr3Fw8

0 Comments
Thanks for reading