Champions League: மீண்டும் அடி வாங்கிய பார்சிலோனா; மீண்டெழுந்து மிரட்டிய லிவர்பூல்!

சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. முதல் சுற்றைப் போல் இந்த வாரமும் சில அதிர்ச்சிகரமான முடிவுகள் அரங்கேறியிருக்கின்றன. கடைசி நிமிடங்களில் விட்ட இரண்டு கோல்களால், ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்கு எதிராக தோல்வியடைந்தது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். அத்லெடிகோ மாட்ரிட் அணியோ பேயர்ன் லெவர்குசன் அணிக்கு எதிராகவும், யுவன்டஸ் பென்ஃபிகாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்தன. புதிய பயிற்சியாளரோடு முதல் முறையாகக் களமிறங்கிய செல்சீ, இந்தப் போட்டியிலும் வெற்றி பெறத் தவறியது. ஆர்பி சால்ஸ்பெர்க் அணிக்கு எதிரான போட்டியை அந்த அணியால் டிராவே செய்ய முடிந்தது. இந்தச் சுற்றில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி பேயர்ன் மூனிச் vs பார்சிலோனா. கடந்த சில ஆண்டுகளாகவே பேயர்ன் மூனிச் அணிக்கு எதிராகத் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிறது பார்சிலோனா. 2020 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் 8-2 என படுதோல்வி அடைந்த வடு இன்னும் அந்த அணி ரசிகர்களிடமிருந்து மறையவில்லை. இந்நிலையில் கடந்த சீசனிலும் விளையாடிய 2 போட்டிகளிலுமே 3-0 என தோற்றது. ஆனால் இம்முறை நிலமை மாறும் என பார்சிலோனா ரசிகர்கள் நம்பினார்கள். அதற்குக் காரணம் ராபர்ட் லெவண்டோஸ்கி. இத்தனை ஆண்டுகள் பேயர்ன் மூனிச்சுக்காக ஆடியவர், இந்த ஆண்டு பார்சிலோனா அணியில் இணைந்தார். அவர் மீண்டும் மூனிச்சுக்கு வருவதை பேயர்ன் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த தாக்கத்தை அவரால் போட்டியில் ஏற்படுத்த முடியவில்லை. Champions League முதல் பாதியில் பார்சிலோனா அணி நிறைய வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் அந்த வாய்ப்புகளை அவர்களால் கோலாக்க முடியவில்லை. லெவண்டோஸ்கியுமே சில வாய்ப்புகளைத் தவறவிட்டார். அது அந்த அணியை இரண்டாவது பாதியில் பாதித்தது. ஜோஷுவா கிம்மிக் எடுத்த கார்னரை ஹெட்டர் மூலம் 50வது நிமிடத்தில் கோலாக்கினார் டிஃபண்டர் லூகாஸ் ஹெர்னாண்டஸ். அடுத்த 4 நிமிடங்களிலேயே இரண்டாவது கோலை அடித்தது அந்த அணி. ஜமால் மூசியாலா கொடுத்த பாஸை அற்புதமாக டிரிபிள் செய்து பாக்சுக்குள் நுழைந்து கோலாக்கினார் லெராய் சனே. அதன்பிறகு பார்சிலோனா எவ்வளவு முயன்றும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. அதனால் 2-0 என வெற்றி பெற்றது பேயர்ன் மூனிச். முதல் சுற்றில் 1-4 என நேபொலி அணியிடம் படுதோல்வி அடைந்திருந்த லிவர்பூல், இந்தச் சுற்றிலும் வெற்றியைத் தவறவிடும் நிலையில் இருந்தது. அயாக்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், 17வது நிமிடத்தில் முகமது சலா அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் முகமது குடூஸ் பதில் கோல் திருப்பி ஆட்டத்தை சமனாக்கினார். வெற்றிக்கான கோலுக்காக லிவர்பூல் எவ்வளவோ போராடியது. ஆனால், கடைசி வரை அவர்களால் முடியவில்லை.இறுதியில் 89வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார் டிஃபண்டர் ஜோயல் மேடிப். கோஸ்டாஸ் சிமிகாஸ் கொடுத்த அற்புதமான கிராஸை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் அவர். இறுதியில் 2-1 என வெற்றி பெற்றது லிவர்பூல்.Champions League அதேபோல் மற்றொரு பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியும் ஒருகட்டத்தில் தோல்வியின் விளிம்பில்தான் இருந்தது. பொருஷியா டார்ட்மண்ட் அணிக்கு எதிராக மோதிய அந்த அணியால் வழக்கம்போல் கோல் மழை பொழிய முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் ஜூட் பெல்லிங்ஹம் அடித்த கோலால் மான்செஸ்டர் சிட்டி பின்தங்கியது. 80வது நிமிடம் வரை பின்தங்கி இருந்த அந்த அணிக்கு, ஜான் ஸ்டோன்ஸ் உயிர் கொடுத்தார். கெவின் டி புருய்னா கொடுத்த பாஸை வாங்கிய ஸ்டோன்ஸ், பாக்சுக்கு வெளியே இருந்து மிரட்டலாக ஒரு கோலடித்தார். அதே உத்வேகத்தில் 4 நிமிடங்கள் கழித்து இன்னொரு கோலையும் அடிதது சிட்டி. இந்த கோலை அடித்தது அனைவரும் எதிர்பார்க்கும் எர்லிங் ஹாலண்ட். அதனால் 6 புள்ளிகளுடன் அந்த பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி. அத்லெடிகோ மாட்ரிட், பேயெர்ன் லெவர்குசன், போர்டோ போன்ற அணிகள் இருக்கும் பிரிவில் கிளப் புரூக் அணி முதலிடத்தில் இருக்கும் என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், 2 போட்டிகளின் முடிவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.Suryakumar Yadav: இந்தியாவின் Mr.360; இந்த SKY-க்கு வானமே எல்லை - போராடி வென்ற சூப்பர் சூர்யகுமார்! முதல் போட்டியில் பேயர்ன் லெவர்குசன் அணியை 1-0 என வென்ற அந்த அணி, இரண்டாவது போட்டியில் போர்டோவைப் பந்தாடியது. இரண்டாவது பாதியில் கோல்களாக அடித்து 4-0 என அபார வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. அந்த அணியின் முன்கள வீரர்கள் கமால் சோவா, ஃபெரான் ஜட்க்லா, ஸ்கோவ் ஓல்சன் மூவருமே கோலடித்து அசத்தினர். சாம்பியன்ஸ் லீக், பெல்ஜியன் முதல் டிவிஷன் என மொத்தம் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. நேபொலி, ரியல் மாட்ரிட், இன்டர் மிலன், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், ஏசி மிலன் போன்ற அணிகள் எந்த வித சவாலும் இன்றி தங்கள் போட்டிகளை வெற்றி பெற்றிருக்கின்றன. சாம்பியன்ஸ் லீக் 2022 - மேட்ச் டே 2 முடிவுகள் விக்டோரியா பிளாசன் 0 - 2 இன்டர் மிலன் ஸ்போர்டிங் லிஸ்பன் 2 - 0 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் லிவர்பூல் 2 - 1 அயாக்ஸ் பேயர்ன் லெவர்குசன் 2 - 0 அத்லெடிகோ மாட்ரிட் எஃப்.சி போர்டோ 0 - 4 கிளப் புரூக் பேயர்ன் மூனிச் 2 - 0 பார்சிலோனா மார்சே 0 - 1 எய்ன்ட்ராக்ட் ஃபிராங்ஃபர்ட் ஏசி மிலன் 3 - 1 டைனமோ ஜாக்ரப் ஷக்தார் டொனட்ஷ்க் 1 - 1 செல்டிக் ரேஞ்சர்ஸ் 0 - 3 நேபொலி செல்சீ 1 - 1 ஆர்பி சால்ஸ்பெர்க் ரியல் மாட்ரிட் 2 - 0 ஆர்பி லெய்ப்ஸிக் எஃப்சி கோபன்ஹாவன் 0 - 0 செவியா மான்செஸ்டர் சிட்டி 2 - 1 பொருஷியா டார்ட்மண்ட் யுவன்டஸ் 1 - 2 பென்ஃபிகா மக்காபி ஹைஃபா 1 - 3 பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்
http://dlvr.it/SYN9D9

Post a Comment

0 Comments