2022 பிரீமியர் லீக் சீசனின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் ரேஸில் பின்தங்கியிருக்கிறது லிவர்பூல். டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான போட்டியை அந்த அணி டிரா செய்திருந்த நிலையில், நியூகாசில் யுனைடெட் அணியைப் பந்தாடி 1 புள்ளி இடைவெளியை மூன்றாக உயர்த்தியிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. சாம்பியன் ரேஸ் மட்டுமல்லாமல், சாம்பியன்ஸ் லீக் இடங்களுக்கான ரேஸும் பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது.
இந்த பிரீமியர் லீக் சீசன் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் கடும் கோதாவில் இருந்தன. பல வாரங்களாகவே இரு அணிகளுக்கும் இடையிலான இடைவெளி ஒரு புள்ளியாகத்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 9 புள்ளிகள் முன்னிலையில் இருந்த மான்செஸ்டர் சிட்டி, அதன்பிறகு சில புள்ளிகள் இழந்து ஒரு புள்ளி மட்டுமே முன்னிலையில் இருந்தது. 2011-12 சீசனைப் போல் கடைசி நாள் வரை இந்த யுத்தம் செல்லும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், 2 புள்ளிகளை இழந்திருக்கிறது லிவர்பூல்.
இந்த வாரம் ஆன்ஃபீல்டில் நடந்த போட்டியில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை சந்தித்தது லிவர்பூல். எதிர்பார்த்ததைப் போலவே டிஃபன்ஸில் பலமாக இருந்தது ஆன்டோனியோ கான்டோவின் அணி. அதனால், லிவர்பூல் வீரர்களால் அட்டாக்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதேசமயம் வழக்கம்போல் கவுன்ட்டர் அட்டாக்கில் அவ்வப்போது லிவர்பூலை தடுமாறவும் செய்தது. முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோலடிக்காமல் போக, ஆட்டம் 0-0 என நீடித்தது.
இரண்டாவது பாதியில் லிவர்பூல் முதல் அடியை அடிக்கும் என்று நினைத்திருந்தால், டாட்டன்ஹாம் அணி முதல் கோலை அடித்தது. ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் கவுன்ட்டர் அட்டாக் செய்த ஸ்பர்ஸ், ஆலிசனின் அரணைத் தடுத்தது. ஹேரி கேன் இடது விங்கிற்கு பந்தை அனுப்ப, பாக்சுக்குள் நுழைந்த செசன்யான், பெனால்டி ஏரியாவுக்கு அதை அனுப்பினார். அதை அழகாக ஒரே டச்சில் கோலாக்கினார் ஹியூங் மின் சன். Liverpool vs Tottenham Hotspur
3 புள்ளிகள் பெற்றால் மட்டுமே மான்செஸ்டர் சிட்டிக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும் என்பதால், உடனடியாக மாற்றங்கள் செய்தார் கிளாப். சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியைப் போல் இந்தப் போட்டியிலும் லிவர்பூலை லூயிஸ் டியாஸ் தான் காப்பாற்றவேண்டியதாக இருந்தது. 74-வது நிமிடத்தில் தியாகோ கொடுத்த பாஸை கோலாக்கினார் அவர். ஆட்டம் 1-1 என்றானது. அதன்பின் இரு அணிகளும் கோலடிக்காததால், ஆட்டம் டிராவானது.
லிவர்பூல் அணி ஆட்டத்தை டிரா செய்த நிலையில், மான்செஸ்டர் சிட்டி அணி நியூகாசில் யுனைடெட்டை வீழ்த்தி 3 புள்ளிகள் முன்னிலை பெற்றது. எடிஹாட் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் எதிர்பார்த்ததைப் போலவே ஆதிக்கம் செலுத்தியது அந்த அணி. Manchester City vs Liverpool
ரஹீம் ஸ்டெர்லிங் 19-வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்க, அடுத்த 19 நிமிடங்களில் இரண்டாவது கோலை அடித்தார் ஆய்மெரிக் லபோர்ட். ரோட்ரி, ஃபில் ஃபோடன், ஸ்டெர்லிங் ஆகியோர் இரண்டாவது பாதியில் கோலடிக்க, அந்த அணி 5-0 என வெற்றி பெற்றது. 35 போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில், மான்செஸ்டர் சிட்டி 86 புள்ளிகளும், லிவர்பூல் 83 புள்ளிகளும் பெற்றிருக்கின்றன.MI v KKR: புயலாக வீசிய பும்ரா; கம்மின்ஸ் மாஸ்டர் கிளாஸ்... பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!
சாம்பியன் ஆவதற்கு இந்த இரு அணிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்க, சாம்பியன்ஸ் லீக் இடத்துக்கான மோதலில் 3 அணிகள் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றன. மூன்றாவது இடத்தில் நல்ல முன்னிலையோடு இருந்த செல்சீ, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து புள்ளிகளை தவறவிட்டது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் சேர்ந்தே 5 புள்ளிகள் தான் எடுத்திருக்கிறது அந்த அணி. கடந்த வாரம் ரிலகேஷன் போராட்டத்தில் இருந்த எவர்டன் அணியுடன் தோற்ற செல்சீ, இந்த வாரம் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிக்கெதிராக 2 கோல் முன்னிலையைத் தவறவிட்டிருக்கிறது. 79 நிமிடங்கள் வரை 2-0 என முன்னிலையில் இருந்த டுசெலின் அணி, அதன்பிறகு 2 கோல்கள் வாங்கி 1 புள்ளி மட்டுமே பெற்றது. Arsenal
செல்சீயின் சரிவு ஆர்செனல் அணிக்கு பெரும் சாதகமாக அமைந்திருக்கிறது. லீட்ஸ் அணிக்கெதிராக 2-1 என வென்று, தொடர்ந்து நான்காவது பிரீமியர் லீக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது அந்த அணி. 66 புள்ளிகள் பெற்று, செல்சீ அணியை விட 1 புள்ளி மட்டுமே பின்தங்கியிருக்கிறது ஆர்செனல். இந்த இரு அணிகளின் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்புகளுக்கும் சவாலாக இருப்பது டாட்டன்ஹாம்தான். ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்த அணி 62 புள்ளிகள் பெற்றிருக்கிறது. கடைசி சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட்டுக்கு 4 புள்ளிகள் இடைவெளி இருந்தாலும், 3 போட்டிகள் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த சுற்றில், டாட்டன்ஹாம் அணி ஆர்செனல் அணியோடு மோதுவதால், இந்தப் போட்டி முக்கிய அங்கம் வகிக்கும்.
http://dlvr.it/SQ3ytv
0 Comments
Thanks for reading