”ஒருவேளை தோனியை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்காவிட்டால்..?” - ரசிகரின் கேள்விக்கு ஹாக் நச் பதில்

“ஐபிஎல் 2022 சீசனில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கவில்லை எனில் அவர் அடுத்தது என்ன செய்வார்? வஎந்த அணிக்கு அவரது கிரிக்கெட் அனுபவம் முக்கியமாக தேவைப்படும்?” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரை டேக் செய்து கேள்விக் கேட்டிருந்தார் கிரிக்கெட் ரசிகர் ஒருவர். 

அதற்கு சுவாரசியமான பதிலை கொடுத்துள்ளார் பிராட் ஹாக். 

“ஐபிஎல் களத்தில் சென்னை அணியின் பேரரசன் மகேந்திர சிங் தோனி. அதனால் அவர் அணியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. வீரராக களம் இறங்காமல் போனால் பயிற்சியாளராக அவர் அவதாரம் எடுக்கலாம்” என சொல்லி உள்ளார் பிராட் ஹாக். 

image

கடந்த 2008இல் ஐபிஎல் தொடர் ஆரம்பமானது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தோனி தான் அனைவரது கண் முன்னும் வருவார். அந்த அணி தடைசெய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் அவர் அணியை வழிநடத்தி உள்ளார். மூன்று முறை சாம்பியன் பட்டமும் வெல்ல உதவியுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xlQhsm
via IFTTT

Post a Comment

0 Comments