
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.
டென்னிஸ் ரசிகர்களின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் வெகுவாகத் தூண்டியுள்ள விம்பிள்டன் தொடர், பரபரப்பான காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தனது 4வது சுற்றில் சிலி வீரர் கிறிஸ்டியன் கரினுடன் இன்று களம் காண்கிறார்.

சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தனது 4-வது சுற்றில் இத்தாலியின் லொரன்ஸோ சொனேகோவை இன்று சந்திக்கிறார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ், கனடாவின் டெனிஸ் ஷபோவலாவ், இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி ஆகியோரும் இன்று 4வது சுற்று போட்டியை எதிர்கொள்கின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி, செக் குடியரசின் கிரெஜ்சிகோவாவுடன் மோதுகிறார். அமெரிக்காவின் கோகோ காப் - ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மோதும் ஆட்டமும் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ரதுகானு, ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் மோதுகிறார். முன்னணி வீராங்கனைகள் போலந்தின் இகா ஸ்வியாடெக், அரினா சபலென்கா, கரோலினா பிளிஸ்கோவா, கரோலினா முச்சோவா ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறும் உறுதியுடன் இன்று களமிறங்குகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jIEIHz
via IFTTT
0 Comments
Thanks for reading