
2022-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என்றும் புதிய விதிகள் வகுக்கப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள், 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில் எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த கடந்த வாரம் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான 15-ஆவது ஐபிஎல் சீசனக்கு ஆயத்தமாகி வருகிறது பிசிசிஐ. அதன்படி இப்போது 8 அணிகள் மோதும் ஐபிஎல் தொடரில் அடுத்தாண்டு முதல் 10 அணிகள் மோதும். இதனால் கூடுதலான இரண்டு அணிகளுக்கான டெண்டரை வரும் ஆகஸ்ட் மாதம் கோரவிருக்கிறது பிசிசிஐ. பின்பு ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்பட்டு இந்தாண்டு அக்டோபர் மாதம் புதிய அணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும். அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான மெகா ஏலம் இந்தாண்டு டிசம்பரில் நடைபெறும் என கூறப்பட்டு இருக்கிறது.

இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு புதிய அணிகளை வாங்க கொல்கத்தாவைச் சேர்ந்த ஆர்பி சஞ்ஜிவ் கோயங்கா குழுமம், அகமதாபாதை சேர்ந்த அதானி குழுமம், ஹைதராபாதை சேர்ந்த அரபிந்தோ பார்மா குழுமம் மற்றும் குஜராத்தை சேர்ந்த டோரென்ட் குழுமம் ஆகியவை ஆர்வமாக இருக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jFxAfe
via IFTTT
0 Comments
Thanks for reading