
நடிகர் யோகி பாபுவை நேரில் சந்தித்த புகைப்படங்களை உற்சாகமுடன் வெளியிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.
நடிகர் யோகி பாபுவும் கிரிக்கெட் வீரர் நடராஜனும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி யோகிபாபுவின் ’மண்டேலா’ படத்தை பாராட்டியிருந்தார். ’யோகி பாபு எனது நண்பர்தான்’ என்றுக்கூறி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை நடிகர் யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேசவைத்தார் நடராஜன். இந்த நிலையில் நடிகர் யோகி பாபுவை கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார்.

இருவரும் ஜாலியாக ரிலாக்ஸாக பேசிக்கொண்டே உணவு உட்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பில் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு யோகி பாபு முருகர் சிலையை பரிசளித்துள்ளார். யோகி பாபு தீவிர முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது வாட்ஸப் டிபியில் கூட பல ஆண்டுகளாக முருகர் படமே வைத்துள்ளார். நடராஜன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபுவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ”நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய நாள். அன்பான மற்றும் கலகலப்பான நண்பர், நடிகர் யோகிபாபுவை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்” என்று புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ymDUfw
via IFTTT
0 Comments
Thanks for reading