யூரோ கோப்பை கால்பந்து: அரையிறுதிக்குள் நுழைந்த ஸ்பெயின், இத்தாலி அணிகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் தகுதி பெற்றன.
 
ரஷ்யாவின் செயின்ட் ஸ்பீட்டர்ஸ்பெர்க் நகரில் நேற்றிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஸ்விட்சர்லாந்தை 3- 1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி ஒரு கோலும் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி ஒரு கோலும் அடித்திருந்தன. ஆட்டநேர முடிவில் 1-1 என சமனில் இருந்த நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் கோல் அடிக்கப்படாததால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி 3 கோல்களும், சுவிட்சர்லாந்து ஒரு கோலும் அடித்தன. இதன்மூலம் ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
 
image
இதேபோல், யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி போட்டியில் பெல்ஜியத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து வரும் 7-ஆம் தேதி லண்டனில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.
 
இதனிடையே உக்ரைன் அணி உடனான யூரோ கோப்பை காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பிரிஸ்டால் விலங்குகள் பூங்காவில் உள்ள எல்விஸ் என்ற பன்றி இதனை கணித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து - ஜெர்மனிக்கு இடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என எல்விஸ் ஏற்கனவே கணித்திருந்தது. இங்கிலாந்து - உக்ரைன் இடையேயான காலிறுதி போட்டி இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ym9Lgm
via IFTTT

Post a Comment

0 Comments