கோபா அமெரிக்கா: பரபரப்பான அரையிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்'டில் அர்ஜென்டினா வெற்றி

கோபா அமெரிக்கா கால்பந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட் முறையில்  3-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றது அர்ஜென்டினா.

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே பிரேசில் தகுதிப்பெற்றுவிட்ட நிலையில் இன்று அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் பாதியின் 7 ஆவது நிமிடத்திலேயே அர்ஜென்டினாவின் மார்டினஸ் முதல் கோலை பதிவு செய்தார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட கொலம்பிய வீரர்கள் தாங்களும் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முதல் பாதி முழுவதிலும் கொலம்பியாவால் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.

image

இதனையடுத்து இரண்டாம் பாதியின் 61-ஆவது நிமிடத்தில் கொலம்பியாவின் டியாஸ் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு பற்றிக்கொண்டது. இதனையடுத்து அர்ஜென்டினா 2-ஆவது கோலை பதிவு செய்ய கடினமாக முயற்சி செய்தது. நட்சத்திர வீரரான மெஸ்ஸி தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற முடியாமல் பந்தை போஸ்ட்டில் அடித்தார். இதனையடுத்து 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் இருந்தபோது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் அர்ஜென்டினா 3 கோல்களும் கொலம்பியா 2 கோல்களும் பதிவு செய்தது. இதனையடுத்து அர்ஜென்டினா வெற்றிப்பெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jNUWzp
via IFTTT

Post a Comment

0 Comments