யூரோ கோப்பை அரையிறுதி: இத்தாலி - ஸ்பெயின் இன்று மோதல்

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

யூரோ கோப்பையை 3 முறை வென்றுள்ள ஸ்பெயின் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சுவீடன், போலந்து அணிகளுடன் டிரா கண்டு தடுமாறியது. கடைசி லீக்கில் சுலோவக்கியாவை துவம்சம் செய்து அந்த அணி அடுத்த சுற்றை எட்டியது. 2-வது சுற்றில் கூடுதல் நேரத்தில் 5-3 என்ற கணக்கில் குரேஷியாவை விரட்டியத்த ஸ்பெயின் அணி கால்இறுதியில் கூடுதல் நேரம் முடிவில் சுவிட்சர்லாந்துடன் டிரா (1-1) கண்டது. இதைத்தொடர்ந்து நடந்த "பெனால்டி ஷூட் அவுட்டில்" 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

image

இத்தாலி அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் அணியாகும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் சமீபகாலங்களில் தொய்வின்றி தொடர்ச்சியாக ஜொலித்து வரும் இத்தாலி அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த யூரோ கோப்பையில் பல்வேறு திருப்பங்கள் கூடியதாகவே இருப்பதால், இந்த ஆட்டத்திலும் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ஸ்பெயின் 12 ஆட்டங்களிலும், இத்தாலி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 12 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. யூரோ மற்றும் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. இதில் இத்தாலி 4 வெற்றியும், ஸ்பெயின் ஒரு வெற்றியும் ருசித்துள்ளன. 4 ஆட்டங்கள் டிரா ஆகியிருக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2SRGDyI
via IFTTT

Post a Comment

0 Comments