1000 விக்கெட்டுகள்... இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளான கவுன்ட்டி கிரிக்கெட்டில் லான்கஷைர் அணிக்காக விளையாடி வருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸாக் கிராலே, ஜோர்டன் காக்ஸ், ஆலிவர் ராபின்சன், ஜேக் லீனிங், ஹெய்னோ குன், மேட் மில்ன்ஸ் மற்றும் ஹாரி ஹாட்மோர் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், கென்ட் அணி 34 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

image

இதில் குன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார்.  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை கடந்தாண்டு புரிந்தார் ஆண்டர்சன். 162 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 617 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

38 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு ஆடினார். டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாமல் இதுவரை 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டெஸட் போட்டிகளில் இங்கிலாந்தின் தூணாக கருதப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிராக தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியை காண காத்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hD87An
via IFTTT

Post a Comment

0 Comments