அதிதி அசோக்: இந்தியாவுக்காக கோல்ஃப் ஆடும் ஒற்றை பெண்! பதக்கம் வெல்வாரா?!

கோல்ஃப் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஆடயிருக்கும் ஒரே பெண் என்ற சாதனையை தனது 18 வயதிலேயே படைத்தவர் அதிதி அசோக். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடுவதற்கும் தகுதிப்பெற்றிருக்கிறார். இந்த ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்காக கோல்ஃப் ஆடப்போகும் ஒரே வீராங்கனை இவர்தான். 23 வயதாகும் அதிதி அசோக் பெங்களூருவில் பிறந்தவர். உயர் நடுத்தர குடும்ப பின்னணியைக் கொண்டவர் என்பதால் கோல்ஃப் ஆடும் வாய்ப்பு சிறு வயதிலேயே அமைந்திருக்கிறது. வார இறுதி நாள்களில் குடும்பத்தோடு பொழுதுபோக்கிற்காக கோல்ஃப் ஆட ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் தொழில்ரீதியாக தீவிரமாக இதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். 2011-ல் கர்நாடக ஜூனியர் மற்றும் சவுத் இந்தியன் ஜூனியர் சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்றிருந்தார். 2012, 2013, 2014 தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளிலும் தேசிய அளவில் ஜூனியர் சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்றிருந்தார். கோல்ஃப் களத்தில் அதிதி அசோக் 2016-ல் சீனியர் அளவில் ஹீரோ இந்திய ஓபன், 2017-ல் ஃபாத்திமா பிந்த் முபாரக் ஓபன் போன்றவற்றிலும் வென்றிருந்தார். இளையோருக்கான ஆசிய போட்டிகள், இளையோருக்கான ஒலிம்பில், ஆசிய போட்டிகள், ஒலிம்பிக் என இந்தியா சார்பில் அத்தனை பெரிய தொடர்களிலும் பங்கேற்ற ஒரே வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார். LPGA, LTE போன்ற தொடர்களிலும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்தார். Also Read: ஹாட்ரிக் தங்கம், உலகளவில் நம்பர் 1 - ஒலிம்பிக்கிலும் சாதிப்பாரா வினேஷ் போகத்?உலகளவிலான தரவரிசை பட்டியலில் முதல் 60 இடங்களில் இருப்பவர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிதி 45 வது இடம் பிடித்திருந்ததால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுவிட்டார். 1904-க்கு பிறகு, 2016 லயே ஒலிம்பிக்கில் கோல்ஃப் போட்டிகள் மீண்டும் சேர்க்கப்பட்டது. அதிதி பதக்கத்தை வெல்லும்பட்சத்தில் அது இந்தியாவில் கோல்ஃப் விளையாட்டுக்கும் ஒரு வெளி உண்டாக வாய்ப்பாக அமையும்.
http://dlvr.it/S3t7SZ

Post a Comment

0 Comments