ஹாட்ரிக் தங்கம், உலகளவில் நம்பர் 1 - ஒலிம்பிக்கிலும் சாதிப்பாரா வினேஷ் போகத்?

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதுமே பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர் - வீராங்கனைகள் என ஒரு பட்டியல் விளையாட்டு உலகில் சுற்றி வரும். இந்த முறை அப்படிச் சுற்றி வரும் எதிர்பார்ப்புப் பட்டியல் அனைத்திலுமே வினேஷ் போகத் எனும் வீராங்கனையின் பெயர் முதன்மையாக இடம்பிடித்திருக்கிறது. யார் இந்த வினேஷ் போகத்... அவர்மீது இவ்வளவு பெரிய நம்பிக்கை உருவானது எப்படி? வினேஷ் போகத்தைப் பற்றிப் பேசும்போது டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு முன்பாக ரியோ டீ ஜெனிரா ஒலிம்பிக்ஸைப் பற்றித்தான் முதலில் பேசியாக வேண்டும். இந்தியாவின் பிரபலமான மல்யுத்த குடும்பமான மகாவீர் போகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் வினேஷ் போகத். மகாவீர் போகத்தின் தம்பியான ராஜ்பால் போகத்தின் மகளே இவர். கீதா மற்றும் பபிதாவைப் போன்றே வினேஷுக்கும் மகாவீரே மல்யுத்தப் பயிற்சிகளை அளித்தார். அவரின் வழிகாட்டுதல்படி மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்ட வினேஷ் மீது 2013 லிருந்து வெளிச்சம் பாய ஆரம்பித்தது. 2013 ஆம் ஆண்டில் இளையோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தொடர்ந்து 2014 காமென்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதிபெற்றார்.Vinesh Phogat இப்போது எப்படி வினேஷின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ இதற்குப் பல மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு அப்போது அவர்மீது இருந்தது. காரணம், மல்யுத்தத்துக்குப் பெயர்போன ஒரு குடும்பத்திலிருந்து வருகிறார், பிரபலமான மல்யுத்த வீராங்கனைகளான கீதா மற்றும் பபிதாவின் தங்கை, எல்லாவற்றுக்கும் மேல் இவரும் அடுத்தடுத்த பெரிய தொடர்களில் சிறப்பாக யுத்தம் செய்து பதக்கங்களை அள்ளியிருந்தார். இதனால், வினேஷ் ஒரு பதக்கத்தோடுதான் இந்தியாவுக்குப் திரும்புவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது வேறு. அப்படியொரு அசம்பாவிதம் நடைபெறும் என யாரும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. சீனாவைச் சேர்ந்த சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே வினேஷின் முட்டியில் பயங்கரமான எலும்பு முறிவு ஏற்பட்டு மல்யுத்தக் களத்திலேயே சரிந்து விழுந்தார். அந்த நொடியில் வினேஷ் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுமே நொடிந்துதான் போனது. நடப்பதறியா மயக்க நிலையில் அவர் இருக்க சுற்றி நின்று மருத்துவக்குழு அவரை ஆய்வு செய்தது. பெரிய காயமாக இருப்பதால் ஸ்கேனுக்குப் பிறகே எதுவும் சொல்லமுடியும் என மருத்துவர்கள் கைவிரிக்க, ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வினேஷ் ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறியதால் சூன் யான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானது. காரணம், அதற்கு முந்தைய போட்டிகளிலெல்லாம் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார் வினேஷ். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எல்லாம் 11-0 என எதிரிக்கு இடமே கொடுக்காமல் எளிதாக வென்றிருந்தார். சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலுமே முதல் புள்ளியை வினேஷ்தான் எடுத்தார். ஒரு நொடி... ஒரு மூவ்... ஒரு காயம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. முழுமையாக ஆடி முடிவு சாதகமில்லாமல் போயிருந்தால் மனது தேறியிருக்கும். எதிர்பாராத அசம்பாவிதத்தால் ஒட்டுமொத்தக் கனவும் சுக்குநூறானதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பதக்கத்தோடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர், வீல் சேரில் மனமுடைந்து வந்து சேர்ந்தார். Vinesh Phogat ஒலிம்பிக் கனவு கைகூடாமல்போனது ஒரு வலி என்றால், இனிமேல் இவரால் மல்யுத்தக் களத்தில் கால்பதிக்க முடியுமா என்கிற கேள்வி கொடுத்த வலி அவரைத் துளைத்தெடுத்தது. ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானது. காரணம், அதற்கு முந்தைய போட்டிகளில் எல்லாம் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார் வினேஷ். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 11-0 என எதிரிக்கு இடமே கொடுக்காமல் எளிதாக வென்றிருந்தார். சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலுமே முதல் புள்ளியை வினேஷ்தான் எடுத்தார். ஒரு நொடி...ஒரு மூவ்...ஒரு காயம் எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது. முழுமையாக ஆடி முடிவு சாதகமில்லாமல் போயிருந்தால் மனது தேறியிருக்கும். எதிர்பாராத அசம்பாவிதத்தால் ஒட்டுமொத்த கனவும் சுக்குநூறானதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பதக்கத்தோடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் வீல் சேரில் மனமுடைந்து வந்து சேர்ந்தார். ஒலிம்பிக் கனவு கைக்கூடாமல் போனது ஒரு வலி என்றால்... இனிமேல் இவரால் மல்யுத்த களத்தில் கால்பதிக்க முடியுமா? என்கிற கேள்வி கொடுத்த வலி அவரை துளைத்தெடுத்தது. Also Read: திருச்சி டு டோக்கியோ: ``கனவு மாறி இருக்கு!" - ஒலிம்பிக் செல்லும் திருச்சி தனலெட்சுமிவினேஷ் போகத்அந்த நாள்களை என்னால் மீண்டும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. காயம் குணமாவதற்காக வீட்டிலிருந்த நேரத்தில் அழுவேன்... தூங்குவேன்... மீண்டும் எழுந்து அழுவேன். இதுதான் என்னுடைய தினசரியாக இருந்தது. ஒரு மனச்சோர்வில் ஏமாற்றத்தில் அவர் இப்படிப் பேசினாலும், ஒரு விளையாட்டு வீரருக்குரிய அழகே 'resilient' என சொல்லக்கூடிய மீண்டெழுதல்தானே! வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்து முன்னேறுபவர்களே வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி வினேஷும் மீண்டெழுந்தார். 2016 ரியோ ஒலிம்பிக் கொடுத்த ஏக்கம், ஏமாற்றம், வலி எல்லாம் சேர்ந்து ஒரு திடமான வினேஷ் 2.0 வெர்ஷனை உருவாக்கியது. ஒரு எதிர்பாராத புறச்சூழலால் வெற்றியைத் தவறவிட்டவரின் வெறி எப்படியிருக்கும் என்பதை வினேஷ் காட்டத் தொடங்கினார். காயத்திலிருந்து மீண்ட பிறகு அவர் செய்த அத்தனை யுத்தங்களிலும் பயங்கரமான பவர் தெரிந்தது. 2017 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்த மல்யுத்தக் களத்தை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிட மாட்டேன் உலகுக்கே உரக்கக் கூறினார். அடுத்தடுத்து வெற்றிகளும் பதக்கங்களும் குவிந்துகொண்டே இருந்தன. 2018-ல் காமென்வெல்த் தொடரில் தங்கம், ஆசியப் போட்டிகளில் சூன் யானை வீழ்த்தி, தங்கம் என ஒவ்வொரு தொடரிலும் அடித்து நொறுக்கினார்.Vinesh Phogat இந்நிலையில்தான் டோக்கியோ ஒலிம்பிக்கை மனதில் வைத்து மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்கிறார் வினேஷ். இதுவரை 48, 50 கிலோ எடைப்பிரிவுகளில் ஆடிக்கொண்டிருந்தவர் தன்னுடைய எடையைக் கொஞ்சம் கூட்டினால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார். இதன்மூலம் எளிதில் காயத்தில் சிக்குவது குறையும், மேலும் தொடர் போட்டிகளினால் ஏற்படும் தசைச்சோர்வும் குறையும். நினைத்தபடியே தன்னுடைய எடையைக் கூட்டி 53 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். இந்தப் பிரிவில் அவருக்குக் கூடுதல் சவால்கள் காத்திருந்தன. இதுவரை அவர் போட்டியிடாத வீராங்கனைகளுடன் போட்டியிட வேண்டும். '2016 ஒலிம்பிக்கிற்குப் பிறகு, நான் எதற்கும் தயாராகவே இருந்தேன். அதனால் இந்தச் சவாலையும் ஏற்றேன்' என அவரே கூறினார். புதிய பிரிவு... புதிய எதிராளிகள்... ஆனால், வினேஷிடமிருந்தது அதே பழைய வைராக்கியம். வென்றது வினேஷின் வைராக்கியமே. Also Read: அடானு தாஸ்: ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைத்துப் பாயும் அம்பு!2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் 53 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டும் அவருக்கு கிடைத்தது. இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்திற்குத் தகுதிபெற்ற முதல் நபர் என்கிற பெருமையையும் பெற்றார். இது அவரின் நெஞ்சுரத்திற்குக் கிடைத்த வெற்றி. இப்போது தன்னுடைய கரியரின் உச்சபட்ச நிலையை அடைந்திருக்கிறார் வினேஷ். கடந்து மூன்று மாதங்களில் நடைபெற்ற Matteo pelicon ranking series, ஆசிய சாம்பியன்ஷிப், போலந்து ஓபன் மூன்றிலுமே தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். உலகளவிலான தரவரிசையில் 53 கிலோ எடைப்பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்தே டோக்கியோவில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் உறுதி என்கிற பெருநம்பிக்கை உருவாகியிருக்கிறது.Vinesh Phogatகீதா போகத்ரியோ ஒலிம்பிக்கிலேயே வினேஷ் பதக்கம் வெல்வாள் என எதிர்பார்த்தோம். எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. ஆனால், இந்த முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலெல்லாம் சிறப்பாக ஆடி ஒலிம்பிக்கிற்குச் சென்றிருக்கிறார். இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்வார் என நம்புகிறோம். அப்படி நடந்தால் உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதராக என்னுடைய அப்பாவே இருப்பார். ஒலிம்பிக் பதக்கம்தான் அவருடைய கனவு. வினேஷ் அதை நிறைவேற்றுவாள் என நம்புகிறோம். கீதா மற்றும் பபிதா பல பதக்கங்களை வென்றிருந்தாலும் மகாவீரின் கனவான ஒலிம்பிக் பதக்கம் மட்டும் இன்னும் நிஜமாகாமல் இருக்கிறது. இந்த முறை வினேஷ் போகத் அந்தக் கனவை நிஜமாக்கிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒரு குடும்பத்தின் கனவு மட்டுமல்ல, ஒரு தேசத்தின் கனவும்கூட! ஆல் தி பெஸ்ட் வினேஷ்!
http://dlvr.it/S3t7RG

Post a Comment

0 Comments