"இந்திய அணியில் அஷ்வின்தான் சுழற்பந்து வீச்சாளராக எனது முதல்தேர்வு" - மைக்கேல் ஹோல்டிங்

இந்தியாவும், நியூசிலாந்து அணியும் மோதி விளையாட உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஷ்வின்தான் தனது முதல் தேர்வு எனத் தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங். வரும் 18 அன்று இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள AEGAS பவுலில் நடைபெறுகிறது. 

“டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டி நடைபெறும் சூழ்நிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்திய அணியின் வலுவான பவுலிங் கூட்டணிக்கு அந்த சூழல் உதவலாம். போட்டி நடைபெறும் நாட்களில் வெயில் இருந்தால் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புகள் உள்ளது. அதுவே வானிலை கொஞ்சம் மந்தமாக இருந்தால் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்தியா விளையாடும் என கருதுகிறேன். 

என்னை கேட்டால் அஷ்வின்தான் முதல்தேர்வு ஸ்பின்னராக இந்த இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும். அவர் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். போட்டி நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து மண்ணில் அஷ்வின் ஆறு டெஸ்ட்  போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 232 ரன்களும், பவுலிங்கில் 175 ஓவர்கள் வீசி 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3psNIBr
via IFTTT

Post a Comment

0 Comments