இந்திய கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து வரலாம் - அரசு அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்து வருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இதன் பின்பு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த சுற்றுப் பயணத்துக்காக இந்திய வீரர்கள் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

image

இதனையடுத்து இந்திய வீரர்கள் ஜூன் 2 ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்படுகிறது. இங்கிலாந்து வரும் இந்திய வீரர்கள் ஹோட்டலில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் வருவதற்கு பிரிட்டன் அரசிடம் பிசிசிஐ அனுமதி கேட்டிருந்தது

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் வருவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் வீர்ரகளுடன் அவர்கள் குடும்பத்தினரும் பயோ பபுள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vL17HK
via IFTTT

Post a Comment

0 Comments