கொரோனா அறிகுறி: தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்

கொரோனா அறிகுறியையடுத்து கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் மீருட் நகரில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

2012-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று வருபவர் புவனேஷ்வர் குமார். ஆனால் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும் டி20 அணியில் புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரூட்டில் புவனேஷ்வர் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா அறிகுறி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் ந தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர். கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு நெகட்டிவா, பாசிட்டிவா என இதுவரை தெரியப்படுத்தவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3p6sM34
via IFTTT

Post a Comment

0 Comments