பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அரையிறுதிக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவை சந்தித்தார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6,7-5 என்ற கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

image

மற்றொரு ஆட்டத்தில் 6 ஆம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 46 ஆம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த டேவிடோவிச் போகினாவுடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்வெரேவ் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டேவிடோவிச் போகினாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்வெரேவ் முதல்முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் அரையிறுதியில் சிட்சிபாஸ், ஸ்வெரேவை சந்திக்க உள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3v5w8oC
via IFTTT

Post a Comment

0 Comments