இலங்கைக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: கேப்டனாக ஷிகர் தவான்

இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூலை 13 முதல் 25 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தத்தொடரில் விளையாடப்போகும் வீரரகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் கேபடன் விராட் கோலியும், துணைக்கேப்டன் ரோகித் ஷர்மாவும் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் இருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

இந்த அணியில் பிரித்வி ஷா,தேவ்தத் படிக்கல்,சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா,நித்தீசு ராணா,இஷன் கிஷன், சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்ப கெளதம்,வருண் சக்கரவர்த்தி,சைனி, குருணல் பாண்டியா,ராகுல் சேத்தன் சக்காரியா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iwHjUD
via IFTTT

Post a Comment

0 Comments