8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓலி ராபின்சனுக்கு தடை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஓலி ராபின்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஓலி ஜான்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவருக்கு முதல் சர்வதேசப் போட்டி. ஆனால் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ராபின்சனுக்கு பாராட்டு கிடைத்தாலும், அவர் சர்ச்சையிலும் சிக்கினார்.

இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட் என தெரியவந்தது. 8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த ட்வீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. இந்நிலையில், ஓலி ராபின்சன் ட்வீட் போட்டது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z23bNv
via IFTTT

Post a Comment

0 Comments