
பல்வேறு நாடுகள் நடத்தும் டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தானவை என்று தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் பாஃப் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் "10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 டி20 லீக் தொடர்களே நடந்து வந்தது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளில் 7 டி20 லீக் தொடர்கள் இப்போது நடக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தானது. மேலும் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பல்வேறு நெருக்கடியை கொடுக்கும்" என்றார் டூப்ளசிஸ்.
மேலும் பேசிய அவர் " வெஸ்ட் இண்டீஸில்தான் முதல் முதலில் டி20 லீக் போட்டிகள் நடக்க ஆரம்பித்தது. அப்போது அந்நாட்டு வீரர்கள் உள்நாட்டு டி20 லீக் தொடர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பல திறமையான வீரர்களை இழந்தது. இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் இதே நிலைதான் நடக்கிறது" என்றார் டூப்ளசிஸ்.
இப்போது டூப்ளசிஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக அமீரகம் சென்றுள்ளார். மேலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wWb7Oi
via IFTTT
0 Comments
Thanks for reading