
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தாண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்தத் தொடரை ஓமன் நாடு நடத்த விருப்பம் தெரிவித்து பிசிசிஐயை அணுகியுள்ளது.
கொரோனா பரவல் சூழ்நிலையை ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி டி20 உலக கோப்பையை நடத்தும் முடிவை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிசிசிஐ விடுத்த வேண்டுகோளை ஐசிசி சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதன்படி இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பரிசீலனை செய்து முடிவை வருகிற 28ஆம் தேதிக்குள் தெரிவிக்க பிசிசிஐக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க ஐ.சி.சி. திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடக்க சுற்று ஆட்டங்களை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டி20 உலகக் கோப்பையை நடத்த ஓமன் மிகுந்த ஆர்வம் தெரிவித்து பிசிசிஐயை அணுகியுள்ளது. இது குறித்து ஓமன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பங்கஜ் கிம்தி கூறும்போது "போட்டியை எங்களை நடத்த ஐசிசி அணுகியது. நாங்கள் இப்போது இது தொடர்பாக பிசிசியிடம் கலந்தாலோசித்து வருகிறோம். ஐசிசி சில தரவுகளை எங்களிடம் கேட்டது. அதனை நாங்கள் இப்போது கொடுத்திருக்கோம். நாங்கள் ஏற்கெனவே அவர்களிடம் கூறியிருக்கிறோம். ஓமனில் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் இருக்கிறது. அதில் ஒன்றில் flood light-களும் இருக்கிறது" என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pq3blP
via IFTTT
0 Comments
Thanks for reading