
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 190 பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்தர் பத்ரா. அதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்குவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த முறை ஒலிம்பிக் நடைபெற உள்ளது.
“இதுவரையில் 100 வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 56 பேர் ஆண்கள். 44 பேர் பெண்கள். மேலும் 25 முதல் 35 வீரர்கள் வரை வரும் சில வாரங்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வீரர்களுக்கு உதவியாக பயணிக்கும் ஊழியர்கள் என அனைவரையும் சேர்த்தால் உத்தேசமாக 190 பேர் வரை அடங்கிய குழு டோக்கியோ பயணிக்க வாய்ப்பு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்வியாக உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் தொடங்க இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியா வீரர்களுக்கான ஸ்போர்ட்ஸ் கிட்டை அறிமுகம் செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3cfQ2GL
via IFTTT
0 Comments
Thanks for reading